• September 12, 2024

விரைவில் கருத்தரிக்க விரும்பினால் என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்?..

நீங்கள் விரைவில் கருத்தரிக்க விரும்பினால் என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை கீழே பார்க்கலாம்.

அதிகாலையில் தாம்பத்தியம் கொண்டால் விரைவில் கருத்தரிக்கலாம்
இன்றைய காலத்தில் கருத்தரிப்பது என்பது கடினமான ஒன்றாகிவிட்டது. இதற்கு தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் தான் முக்கிய காரணம். நீங்கள் விரைவில் கருத்தரிக்க விரும்பினால் சரியான காலத்தில் உடலுறவு கொள்ள வேண்டும். இங்கு எந்த காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால், வேகமாக கருத்தரிக்க முடியும் என்பதை கீழே பார்க்கலாம்.

* கருவளமிக்க நாட்களில் உடலுறவு கொண்டால், கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். ஒரு பெண்ணிற்கு கருவளமிக்க நாட்கள் என்பது மாதவிடாய் சுழற்சியின் 8 ஆம் நாளில் இருந்து, 19 ஆவது நாள் வரை ஆகும்.

* அதிகாலையில் 5.48 மணிக்கு உடலுறவில் ஈடுபடுவது சிறந்தது. ஏனெனில் இந்த நேரத்தில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகமாக இருப்பதாவும், உடலில் ஆற்றல் அதிகமாக இருப்பதாகவும், ரிலாக்ஸான மனநிலையுடனும் இருப்பதால், இக்காலத்தில் உடலுறவு கொள்ளும் போது வேகமாக கருத்தரிக்க முடியும்.

* அதிகாலையில் உடலுறவு கொள்வது எப்படி சிறந்ததோ, அதேப்போல் இரவில் படுக்கும் முன் உடலுறவு கொள்வதும் கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்கள்.

* தற்போதைய வேலைப்பளுமிக்க டென்சன் நிறைந்த வாழ்க்கை முறையால், தம்பதிகள் குறைவான அளவில் உடலுறவு கொள்கின்றனர். இதன் காரணமாக, ஆண்களின் விந்தணுவின் இயக்கம் பாதிக்கப்பட்டு, கருப்பையை அடைய முடியாமல் போய், கருத்தரிக்கும் வாய்ப்பும் குறைகிறது. எனவே குறைந்தது வாரத்திற்கு 2 முறையாவது உடலுறவு கொள்ள வேண்டும். இதனால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

* மன அழுத்தம் உடலில் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தி, உடலின் சாதாரண இயக்கங்களான தூக்கம், செரிமானம், உடல் எடை போன்றவற்றில் இடையூறை ஏற்படுத்தி, உடல் சோர்வை அதிகரித்து, மறைமுகமாக பெண்களின் இனப்பெருக்க சுழற்சியையும், ஆண்களின் விந்தணுவின் எண்ணிக்கையையும் பாதிக்கும்.

எனவே மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள தம்பதிகள் அடிக்கடி ஹனிமூன்/சுற்றுலா செல்ல வேண்டும்.

Read Previous

சுவையான நண்டு குழம்பு செய்வது எப்படி தெரியுமா?.. செய்முறை உள்ளே..!!

Read Next

பெரும் சோகம்..!! ஃபிரிட்ஜை திறந்த சிறுமி மின்சாரம் தாக்கி பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular