
ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும் ஒன்றுதான் மாதம் மாதம் வரும் மாதவிடாய். இந்த மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வயிற்று வலி பிரச்சனை நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில் ஏதாவது ஒரு சமயத்தில் தனது மாதவிடாயை சில நாட்கள் முன்பு சீக்கிரமாக வர வைக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புவார்கள். அல்லது சில நாட்கள் தாமதமாக வர வைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்கு காரணம் என்னவென்றால் பூஜை அல்லது பண்டிகைகள் சம்பந்தமான நாட்களில் மாதவிடாய் ஆகாமல் இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புவார்கள். இந்நிலையில் மாதவிடாயை சில நாட்கள் சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ வர வைக்க இயற்கையான உணவு முறை என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
உடலில் அதிக அளவு வெப்பத்தை உருவாக்கும் உணவை அதிகமாக உட்கொண்டால் மாதவிடாய் சுழற்சியை விரைவில் வரவழைக்க முடியும். விரைவில் மாதவிடாய் வரவழைக்க நாம் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
பப்பாளி பழம் மற்றும் அன்னாசி பழம் மற்றும் ஓம விதைகள் ஆகியவற்றை சாப்பிடுவதன் மூலம் மாதவிடாயை விரைவாக வர வைக்க முடியும். எள் சம்பந்தமான உணவுகளை
சாப்பிடுவதன் மூலமும் மாதவிடாயை விரைவாக வரவழைக்க முடியும்.
மாதவிடாய் தாமதமாக வரவழைக்க சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி தற்போது பார்க்கலாம்.
மாதவிடாய் தாமதமாக வருவதற்கு சிறிது வெந்தயத்தை எடுத்து வாயில் இட்டு தண்ணீர் பருகிவர மாதவிலக்கு தள்ளிப் போகும். மாதாந்திர மாதவிடாய் வர வாய்ப்புள்ள ஐந்து நாட்களுக்கு முன்னவே இதையெல்லாம் செய்ய வேண்டும். வெள்ளரிப்பிஞ்சுகளை உட்கொண்டு வர உடல் சூடு குறைவதால் மாதவிலக்கு தள்ளி போவதற்கான வாய்ப்புகள் அதிகம். பொட்டுக்கடலை பொட்டுக்கடலையை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் நன்கு மென்று தின்று தண்ணீர் பருகி வந்தால் மாதவிடாயை தள்ளிப் போடலாம்.