தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய் இன்று பெரியாரின் 146 ஆவது பிறந்தநாளையொட்டி பெரியார் திடலில் பெரியாருக்கு மாலை அணிவித்து மரியாதை தெரிவித்துள்ளார்…
சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு தமிழக வெற்றி கழக கட்சி தலைவர் விஜய் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர், அரசியல் கட்சி தொடங்கிய பின் அவர் பொதுவெளியில் கலந்து கொள்ளும் முதல் நிகழ்வும் இதுவே ஆகும் வேறு எந்த தலைவர்கள் சிலைக்கும் அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் தமிழக வெற்றி கட்சி தலைவர் விஜய் மற்றும் அவருடன் புரூஸ்லீ ஆனந்த் இருந்தார், இதுவே முதல் முறையாக பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியது அரசியல் பேசு பொருளாக மாறி உள்ளது, தமிழகத்தில் 2025 இல் தமிழக வெற்றி கழகம் சிறப்பான முறையில் ஆட்சி அமைக்கும் என்றும் மக்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களையும் தமிழக வெற்றி கழக கட்சித் தலைவர் விஜய் செய்வார் என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர், மேலும் அடுத்த முறை ஆட்சியைப் பிடிப்பது தமிழக வெற்றி கழகமாகவே இருக்கும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிய வருகிறது..!!




