பழைய ஜோக் தங்கதுரை என்று அழைக்கப்பட்டு வரும் இவர் காஸ்ட்லியான bmw காரை வாங்கி அதன் ஏழை குழந்தைகளை அழைத்துச் சென்று கொண்டாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு என்று நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் தங்கதுரை. இவரை அனைவரும் பழைய ஜோக் தங்கதுரை என்று அழைப்பார்கள். இவர் ஜோக் அனைத்துமே பழையதாக இருக்கும் என்பதால் பழைய ஜோக் தங்கதுரை என்று அழைக்கப்பட்டார். இவர் கூறும் ஜோக்கெல்லாம் பழசாக இருந்தாலும் அவருடைய ஸ்லாங்குதான் நமக்கு சிரிப்பு வர வைக்கும்.
எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் சிறப்பாக நடிக்க கூடியவர் தங்கதுரை. இவர் எங்கேயும் எப்போதும், மாநகரம், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட திரைப்படங்களில் ஒரு சில கேரக்டர்களில் நடித்திருக்கின்றார். விஜய் டிவியில் ஒரு முக்கிய காமெடியனாக விலகி வரும் இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அருணா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றது. மேலும் தற்போது விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றார். குக் வித் கோமாளி, அது இது எது உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்களை சிரிக்க வைத்து வருகின்றார். அங்கும் பழைய ஜோக்குகளை சொல்லிக் கொண்டு அனைவரையும் கடுப்பேத்தி வரும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இவர் சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கின்றார். அந்த வீடியோவில் தனது கனவு காரான bmw காரை வாங்கி இருக்கின்றார். அதில் ஏழை, எளிய குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவர்களுக்கு புது துணி எடுத்துக் கொடுத்து பின்னர் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று உணவுகளை எல்லாம் வாங்கிக் கொடுத்து அவர்களுக்கு ஊட்டி விட்டு மகிழ்ச்சி அடைந்திருக்கின்றார்.
இந்த வீடியோவை வெளியிட்ட அவர் அந்த பதிவில் தெரிவித்திருந்ததாவது “எனது நீண்ட பயணம் மற்றும் பல போராட்டங்களுக்குப் பிறகு எனது கனவு காரான பிஎம்டபிள்யூவை வாங்கிவிட்டேன். இந்த மகிழ்ச்சியை அன்பான ஏழை குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். நான் அவர்களை எனது வாகனத்தில் அழைத்துச் சென்று ஒரு நாள் முழுவதும் கழித்து இருக்கின்றேன். அவர்களின் அன்பு விலைமதிப்பற்றது. உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி” என்று பகிர்ந்து இருக்கின்றார்.
View this post on Instagram