
- வில்வமரம் பொதுப்பண்புகள்
* மரத்தின் பெயர் : வில்வமரம்
* தாவரவியல் பெயர் : ஏகிள் மர்மெலோஸ்
* ஆங்கில பெயர் : Bael Tree
* மண் வகை : அனைத்து வகையான மண்ணிலும் வளரும் மரங்கள்
* தாவர குடும்பம் : ரூடேசி
பொதுப்பண்புகள் :
* வில்வ இலை, பிஞ்சு, பழம், வேர் ஆகியவை துவர்ப்பு, இனிப்பு, கைப்புச் சுவைகளும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை.
* வில்வ பட்டைகள் கடினமான முட்களைக் கொண்டது. ஆண்டுதோறும் இலையுதிர்க்கக் கூடிய, நடுத்தரமான உயரம் கொண்ட மரம்.
* வில்வ இலை பொதுவாக 3 அல்லது 5 சிற்றிலைகளைக் கொண்டதாகும்.
* வில்வ பூக்கள், 2.5 செ.மீ. குறுக்களவில், சிறிய கொத்துகளாக, பசுமை கலந்த வெள்ளை நிறத்தில், இனிய மணத்துடன் காணப்படும்.
* வில்வ பழங்கள், பெரியவை, 20 செ.மீ. வரை குறுக்களவானவை, கோள வடிவமானவை, முதலில் பச்சையாகவும், முதிர்ந்த பின்னர் சாம்பல் நிறமாகவும் இருக்கும்.
* வில்வ பழத்தோல், கடினமானது, பழச்சதை ஆரஞ்சு நிறமானது. மணமும், சுவையும் கொண்டது.
* வில்வம் இந்தியா முழுவதும், சமவெளிகள், மலையடிவாரங்களில் பரவலாக காணப்படுகின்றது. கோயில்கள், வழிபாட்டுக்குரிய காடுகளில் இவை நட்டுப் பராமரிக்கப்படுகின்றன.
* பல சிவன் கோயில்களில் இவை ஸ்தல விருட்சமாக வளர்கின்றன.
* வில்வ இலை, சிவ வழிபாட்டின்போது உபயோகிக்கப்படும் மிக முக்கியமான அர்ச்சனைப் பொருளாகும். கூவிளம், கூவிளை, மாதுரம் ஆகிய முக்கியமான மாற்றுப் பெயர்களும் உண்டு.