விளக்கெண்ணெய் தேய்த்தால் முடி கருமையாகுமா?
விளக்கெண்ணெயில் ஒமேகா-9 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது
உடல் சூட்டினால் சிலருக்கு சீக்கிரமாக நரை ஏற்படும் இதினால் ஏற்படும் இள நரையை தடுக்கும் ..ஆனால் வயதுகேற்ப வரும் நரையை கருமையாக்கும் திறன் குறைவு தான் ..மேலும் நரை வருவதை குறைக்கலாம்
சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் இதை பயன்படுத்தாமல் இருப்பது சிறந்தது..ஏனெனில் மிகுந்த குளிர்ச்சியானது தலைவலி ஏற்படும்..
முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்
கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் பொருட்களில் முக்கியமானது விளக்கெண்ணெய். ஆகவே வாரம் 1-2 முறை விளக்கெண்ணெயை தடவி மசாஜ் செய்து குளித்தால், கூந்தல் உதிர்தல் குறைந்து, அதன் வளர்ச்சி அதிகரிக்கும்.
முடி வறட்சியைத் தடுக்கும்
உங்களுக்கு முடி அதிக வறட்சியுடன் இருந்தால், வாரம் ஒரு முறை விளக்கெண்ணெய் மசாஜ் குளியல் எடுங்கள். இதனால் முடியின் வறட்சி தடுக்கப்படுவதோடு, அடர்த்தியும் அதிகமாகும்.
அடர்த்தி நிறைந்த விளக்கெண்ணெய் கூந்தலின் அடர்த்தியை அதிகரிக்கிறது என்பதோடு இளநரை, வறண்ட கூந்தல் பிரச் னைகளையும் சரிசெய்கிறது.
பயன்படுத்தும் முறை :
விளக்கெண்ணெய் + ஆலிவ் எண்ணெய் +தேங்காய் எண்ணெய் .எல்லாவற்றிலும் 2 ஸ்பூன் கலந்து double boiler method ல் சூடு செய்து தேய்ந்து 20 நிமிடத்தில் சீயக்காய் தேய்ந்து கழுவவும் ….இந்த முறை நான் பின்பற்றியது ..
Double boiler method
ஓரு பாத்திரத்தில் சிறிதளவு நீர் ஊற்றி சூடு செய்து விட்டு ..அதில் மிதக்குமாறு எண்ணெய் கிண்ணத்தை வைக்கவும்
சிறிது எண்ணெய் சூடு ஏறிய பின்னர் ..இளஞ்சூட்டில் தலையில் தடவலாம் ..




