• September 11, 2024

விளக்கை எந்த நாளில் கழுவனும்?.. தவறு நடந்தால் லட்சமி வெளியேறிவிடுவாள்..!! பண சிக்கல் தலைவிரித்தாடும்..!!

வீட்டில் விளக்கு ஏற்றுவது என்பது தமிழர் கலாச்சாரத்திற்கே உரிய ஒரு வழக்கமாகும்.

விளக்கு மங்களத்தை குறிக்கும்.

அற்புதமான பலன்களை கொடுக்கும்  விளக்கு பற்றி பல விடயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

விளக்கு ஏற்ற நல்ல நேரம்:

வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது நல்ல நேரம் பார்த்து ஏற்றுவது அமோகமான பலன்களை கொடுக்கும்.

மாலை 5:36 மணி முதல் 6:00 மணிக்குள்ளாக தீபத்தை ஏற்றுவது முறையாகும். மற்றபடி ராகு, குளிகை, எமகண்டம் தவிர்த்து தீபம் ஏற்றலாம். ’90 நிமிடங்களுக்கு’ மேல் தீபத்தை எரிய விட வேண்டாம். ஆறு மணிக்கு ஏற்றப்படும் தீபத்தை, ஏழரை மணிக்குள் புஷ்பத்தை கொண்டு மலை ஏற்றி விட வேண்டும்.

அதற்கு மேல் தீபத்தை எரிய விடக்கூடாது.

பரிகாரத்திற்கு அணையா விளக்கு ஏற்றும் பொழுது, நாள் முழுவதும் ஏற்றி வைக்கலாம் அதில் எந்த ஒரு குற்றமும் இல்லை. மற்ற சமயங்களில் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் தீபத்தை ஏற்றி வைப்பது நல்லதல்ல.

தீபம் ஏற்றும் முறை:

 தீபம் ஏற்றும் போது திரி இரட்டையாக இருக்க வேண்டும்.
இந்த இரட்டை திரியும் ஒன்றோடு ஒன்று சமமாக இருக்க வேண்டும்.
ஏறியும், இறங்கியும் இருக்க கூடாது. குளித்துவிட்டு ஈர உடம்புடன் அல்லது ஈர துணியை கட்டிக்கொண்டு  விளக்கு ஏற்ற கூடாது.
ஆண்கள், பெண்கள் இருவரும் இதை தவிர்ப்பது நல்லது. பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஐந்து நாட்களுக்கு  விளக்கு ஏற்ற கூடாது.

விளக்கு கழுவும் நாட்கள்:

பூஜை ஜாமான்களை சுத்தம் செய்யும் போது இரசாயனம் கலந்த செயற்கை பொருட்களை உபயோகப்படுத்தாமல் சாம்பல், உமி, தவிடு, சீயக்காய், புளி, எலுமிச்சை, செங்கல் தூள் போன்றவற்றை பயன்படுத்துவது சிறந்தது.
ஞாயிறு, திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் விளக்கை துலக்குவது நல்லது.
செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் லட்சமி வெளியேறிவிடுவாள் என்பது ஐதீகம்.

Read Previous

தேங்காயை சாப்பிடுவதன் மூலமாக கிடைக்கும் நன்மைகள்..!!

Read Next

உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான துளசி துவையல் செய்வது எப்படி?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular