தமிழகம் விளையாட்டு துறையில் முதன்மை மாநிலமாக திகழ வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்தலை சார்பில் நடைபெற்ற விழாவில் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 265 ஊராட்சிகளை சார்ந்த 410 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.20 கோடி மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள ஊராட்சிகளில் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் தமிழகம் முதன்மை மாநிலமாக மாறும் அதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றோம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விளையாட்டு நகரங்கள் மட்டும் இன்றி கிராமங்களையும் சென்றடைய வேண்டும், இதற்கு இங்கு வழங்கப்படும் விளையாட்டு உபகரணங்கள் பயனுள்ளதாக இருக்கும். கிராமப்புற மாணவர்கள் விளையாட்டில் தலைசிறந்து விளங்க வேண்டும் என்று மாணவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனி விளையாட்டு அரங்கம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பார் என்ற தகவல் கிடைத்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக கட்சி தமிழக முழுவதும் அபார வெற்றி பெற்றதை குறித்து 18 வது மக்களவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
எனவே ஒவ்வொரு தொகுதிகளிலும் அளித்த வாக்குகளை நிறைவேற்ற வேண்டியது மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசின் பொறுப்பு என்று விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய லோகாவினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தற்பொழுது லோகோ கடந்த 30 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.