
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வுக்கான முடிவுகள் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட நிலையில் தற்போது மாணவர்கள் தங்களது உயர் கல்விக்காக தங்களது கல்லூரிகளை தேர்வு செய்து வருகின்றனர்.
இதன் அடிப்படையில் விளையாட்டு வீரர்களுக்கான இடம் ஒதுக்கீட்டுக்கான கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.அண்ணா பல்கலைக்கழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பது என்னவென்றால் “2022-2023 ஆம் கல்வியாண்டில் நடைபெறும் பொறியியல் கலந்தாய்வு விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டு ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வருகின்ற 05/06/2023 முதல் 14/06/2023 வரை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான கால அட்டவணை விரி www.tneaonline.org இல் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் மாணவர்கள் தங்களது பெயருக்கு எதிரே கொடுக்கப்பட்டு உள்ள நாள் மட்டும் நேரத்தில் நேரடியாக கலந்து கொள்ள வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது