விருதுநகர் மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். இந்த விழாவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 2111 நபர்களுக்கு ரூபாய்.42.96 லட்சம் மதிப்பில் பரிசு தொகைகள் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து இவ்விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், தமிழக விளையாட்டு வீரர்கள் உலக அளவில் பல சாதனைகளை படைத்து வருவதாகவும், அவர்களை கெளரவிக்கும் வகையில் முதற்கட்டமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார். விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3% இடஒதுக்கீடு கோரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.




