விளையாட சென்று வீடு திரும்பாத 3 சிறுவர்கள்..!! தேடி அலைந்த பெற்றோருக்கு காத்திருந்த பேரிடி..!!

கரூரில் ஆண்டாள் கோவில் புதூரில் வசித்து வரும் ரமேஷ் என்பவரது மகன் அஸ்வின் (வயது 12), அதே பகுதியை சார்ந்த ஸ்ரீதரின் மகன் விஷ்ணு (வயது 11)  இளங்கோ என்பவரது மகன் மாரிமுத்து (வயது 11) இவர்கள் மூவரும் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டிருப்பதால் திங்கட்கிழமை காலை அவர்கள் மூவரும் விளையாட செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றனர். ஆனால் மாலை வெகுநேரமாகியும் அவர்கள் மூவரும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவர்களின் பெற்றோர் ஊரில் பல்வேறு பகுதிகளில் தேடினார். ஆனால் அவர்கள் எங்கும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் அதே பகுதியை சார்ந்த ரவிச்சந்திரன் என்பவர் இரவு 11 மணி அளவில் தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு கிணற்றிற்கு அருகே மூவரின் காலனிகளும், உடைகளும் கிடந்தது. இது குறித்து சிறுவர்களின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சந்தேகம் அடைந்த அவர்கள் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் தேடிப் பார்த்து இரவு 12 மணி அளவில் சிறுவர்கள் மூவரின் உடல்களை மீட்டனர். பின்னர் அவர்களது உடல்களை பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் மூழ்கடித்துள்ளது .

Read Previous

திடீரென கதவை தட்டிய கணவன்..!! கையும் களவுமாக சிக்கிய கள்ளக்காதலனுக்கு நேர்ந்த கொடூரம்..!!

Read Next

சேலையிலும் இவ்வளவு கவர்ச்சியா..!! திணறவைக்கும் தர்ஷா குப்தா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular