கள்ளக்குறிச்சி கள்ளச்சார விவகாரம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதில் பலியானவரின் எண்ணிக்கை தற்போது 52 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கள்ள சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவார்கள் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வரை கள்ளக்குறிச்சி கர்ணாபுரத்தில் 52 பேரில் மரணத்திற்கு காரணமான விஷ சாராயம் விற்பனையை செய்த கன்னுக்குட்டி என்கின்ற கோவிந்தராஜன் அவரின் மனைவி விஜயா, தாமோதரன் ,மூலப்பொருளான மெத்தனால் கொண்டு வந்த மாதேஷ், சின்னத்துரை அவரின் நண்பர்கள் மதன்குமார், ஜோசப் ராஜா ஆகிய எட்டு பேரை இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தமிழக முழுவதும் கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள், விற்பனை செய்பவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்நிலையில் விழுப்புரத்தில் விஷ சாராயம் குடித்த ஒருவர் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .விழுப்புரம் அந்தியூரை சார்ந்த தொழிலாளி கிருஷ்ணசாமி (வயது 38) இவர் கள்ளச்சாராயம் அருந்திய நிலையில் உடல் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். கடந்த 17ஆம் தேதி சொந்த ஊர் சென்று சாராயம் குடித்துவிட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பி உள்ளார் கிருஷ்ணசாமி. இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தற்பொழுது சென்னை மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ள சாராய விவகாரமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விழுப்புரத்திலும் கள்ளச்சாராயம் விற்கப்படுகின்றதா..? யாருக்காவது உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதா..? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.