விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் ரூ.5000..!! சூப்பர் அறிவிப்பு இதோ..!!

விவசாயிகளுக்கு மத்திய,மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விதை மானியம், உர மானியம், ஆண்டுக்கு 6000 உதவித்தொகை, என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வேளாண் இயந்திரங்கள் வாங்க விவசாயிகளுக்கு 50% மானியம் வழங்கப்படுகிறது. அதேபோல், பெண் விவசாயிகளுக்கும் 50% மானியம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தரமான விதைகள் மானியம், உர மானியம் ஆண்டுக்கு 6000 உதவித்தொகை என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. வேளாண் இயந்திரங்கள் வாங்க விவசாயிகளுக்கு 50% மானியம், வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்க இயந்திரங்கள் வாங்கவும் மானியமும் அரசு தருகிறது.

விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் செல்போன் மூலம் விவசாய பம்பு செட்டுகளை இயக்கும் கருவிக்கு அரசு மானியம் தருவதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்காக ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறு விவசாயிகள், குறு விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு மொத்த செலவில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.7000, மற்ற விவசாயிகளுக்கு மொத்த செலவில் 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5000 வழங்கப்படும். திருப்பூர் மாவட்டத்தில் 250 பம்பு செட்டுகளுக்கு இந்த கருவி அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Read Previous

நூதன முறையில் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது..!!

Read Next

Fixed Deposit-க்கு அதிக லாபம் தரும் வங்கிகள்..!! இவ்ளோ இருக்குனு உங்களுக்கு தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular