சென்னையில் வீடு கட்டி தருவதாக கூறி சொந்த அக்காவிடம் 70 லட்சம் நில மோசடி செய்ததாக தம்பி ஒருவரை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பூந்தமல்லி அடுத்துள்ள மாங்காடு மலையம்பாக்கம் ரஹமத் நகரை சார்ந்தவர் சிவகுண வாசகி. இவர்களுக்கு சொந்தமாக நிலம் பூந்தமல்லி அடுத்துள்ள லட்சுமிபுரம் பகுதியில் உள்ளதாக கூறப்படுகிறது. சிவகுணவாசகியின் தம்பியான சென்னை மேம்பாக்கம் பகுதியை சார்ந்த ஜெயகார்த்திக். இவர் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கும் தொழிலை செய்து வருகின்றார், இவர் தனது அக்கா சிவகுணவாசுகி இடம் உள்ள இடத்தை எனது பெயருக்கு பொது அதிகாரம் செய்து கொடுங்கள், இதில் வீடுகளை கட்டி அதில் உங்களுக்கு ஒரு வீடும் ரூ.14 லட்சம் பணமும் தருவதாக கூறப்படுகிறது.
சிவகுணவாசகியும் ஜெயகார்த்தி பெயருக்கு தனது சொத்தை பொது அதிகாரம் செய்து கொடுத்தார். இந்நிலையில் அந்த இடத்தில் நான்கு வீடுகளை கட்டிய ஜெயகாந்தி அதில் மூன்று வீடுகளை தனது அக்காவுக்கு தெரியாமல் விற்பனையும் செய்துள்ளார். இது குறித்து சிவகுணவாசுகி கணவன் கண்ணன் ஆவடி மத்திய குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் கொடுத்துள்ளார்.
வழக்கு பதிவு செய்த மத்திய பிரிவு காவல் துறையினர் மோசடியில் ஈடுபட்ட ஜெய கார்த்தியை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். சொந்த அக்காவிடம் ரூ.70 லட்சம் மதிப்புள்ள இடத்தை மோசடி செய்த தம்பி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.