வீடு சுத்தம் செய்யும் மாப்பை எப்படி சுத்தம் செய்வது என்று கவலைப்படுகிறீர்களா..!! இந்த பதிவை கட்டாயம் பாருங்கள்..!!

நம் அனைவருக்கும் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வது மிகவும் பிடிக்கும். ஆகையால் நமது வீட்டை அடிக்கடி துடைக்கும் பழக்கம் நமக்கு இருக்கிறது. ஆனால் அந்த மாப்பை எப்படி சுத்தம் செய்வது என்று நமக்கு தெரியாது. ஆனால் அந்த மாப்பை சுத்தமாக கழுவினால் தான் எந்த கிருமிகளும் நமது வீட்டை அண்டாது. ஒருவேளை அதை ஒழுங்காக கழுவவில்லை என்றால் நமது தரைகளில் பிசுபிசுப்பும் கருப்பு அச்சம் உண்டாகும். எப்படி அந்த மாப்பை சுத்தம் செய்வது என்று இந்த பதிவில் காண்போம்.

ஒரு பக்கெட்டில் சுடு தண்ணீர் ஊற்றி இரண்டு எலுமிச்சை பழங்களின் சாரை சேர்த்து கல்லுப்பு கலந்து கரைத்து வைத்து அதில் அந்த மாப்பை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் அதை நன்றாக கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் மாப்பில் இருக்கும் அழுக்கு, நீங்கிவிடும். மேலும் அதில் பாக்டீரியாக்களும் தாங்காது.

அல்லது ஒரு பக்கெட்டில் சுடுதண்ணீர் ஊற்றி அதில் வினிகர் சேர்த்து கலந்து கொள்ளவும். இதில் இந்த மாப்பை 10 நிமிடங்கள் வைத்திருக்கவும். பின் அதை சுத்தம் செய்து எடுத்தால் அதில் இருக்கும் பிசுபிசுப்புகளும் பாக்டீரியாக்களும் மொத்தமாக நீங்கிவிடும்.

இந்த இரண்டு வழிகளில் ஏதேனும் ஒரு வழியை பயன்படுத்தி வீடு துடைக்கும் மாப்பை சுத்தம் செய்யவும். இதனால் மாப்பும் புதிது போல இருக்கும் நமது வீடும் புதிது போல இருக்கும் மேலும் எந்த நோய்களும் நம்மை அண்டாது.

Read Previous

நினைவாற்றலை அதிகரிக்க உதவும் சில பாட்டி வைத்திய குறிப்புகள்..!!

Read Next

உங்கள் குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்துப் பாருங்கள்..!! நொடியில் காலியாகும் ரெசிபி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular