எல்லோருக்குள்ளும் ஆசை உண்டு சில ஆசைகள் மனிதர்களுக்கிடையே அதை நிறைவேற கூடிய ஒன்றாக இருக்கும் சில ஆசைகள் கற்பனையாகவும் கனவாகவும் இருந்து மறைந்துவிடும் அப்படி இருக்கையில் கட்டிட தொழிலாளி ஒருவர் விமானத்தில் பறக்க ஆசைப்பட்டு அந்த ஆசை நிறைவேறாமல் போனது அதை தொடர்ந்து அவர் தன் விடாமுயற்சியினால் வீட்டையே விமானமாக மாற்றியுள்ளார்,
ஆம் கம்போடியாவை சேர்ந்த க்ராச் போவ் என்ற கட்டிட தொழிலாளி விமானத்தில் செல்வதற்கு ஆசைப்பட்டார் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லாததால் தான் 30 ஆண்டு காலமாக சேர்த்து வைத்திருந்த பணத்தை வைத்து தனது காலி நிலத்தில் தரை மட்டத்திலிருந்து ஆறடி உயரம் வீட்டை விமானமாக மாற்றியுள்ளார் இதிலிருந்து படுக்கை அறையும் குளியலறையும் வைத்து அழகாக வடிவமைத்துள்ளார், இதனை பார்ப்பதற்கு விமானமாகவே உள்ளது என்றும் இதில் பயணிப்பது போலவும் தனது வார்த்தைகளை இணையத்தில் பகிர்ந்துள்ளார், இதனை வாசிகள் பெரிதும் இவரை பாராட்டி வருகிறார்கள்.