திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பச்சம்பேட்டை வளைவில் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டின் அலமாரியில் இருந்த ஒரு கிராம் தங்க நாணயத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள்.போலீசார் விசாரணை.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பச்சாம்பட்டை வளைவு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி 64 வயதான சகுந்தலா. இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். நேற்று இரவு வேலைகளை முடித்துவிட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 2 மணியளவில் சகுந்தலா கழிவறைக்கு சென்று விட்டு வந்து படுத்து உள்ளார். பின்னர் காலை 6 மணிக்கு எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் வீட்டின் அலமாரியை சோதனை செய்தபோது அதில் வைத்திருந்த ஒரு பவுன் தங்க நாணயத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இது குறித்து லால்குடி காவல் நிலையத்தில் சகுந்தலா கொடுத்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.