
இசைஞானி இளையராஜாவின் இசையில் என் ராசாவின் மனசிலே படத்தில் இடம்பெற்ற இந்த சிறுவனின் குரலாக தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் கல்பனா ராகவேந்தர் .கடவுள் தந்த அழகிய வாழ்வைப் போற்றும் விதமாக இருக்கும் கல்பனாவின் குரல் கேட்போரின் நெஞ்சை உருக்கும் வகையில் இருக்கும். பிரியமான தோழி படத்தில் இடம்பெற்ற பெண்ணே நீயும் பெண்ணா பாடல் மனதை மயக்கும். எத்தகைய ஏராளமான ஹிட் பாடல்களை தமிழ் பற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பாடியுள்ள பிரபல பாடகி கல்பனா ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் பேட்டை பகுதியில் உள்ள அவரது வீட்டில் சுயநினைவின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளார். வீட்டு கதவுகள் கடந்த மூன்று தினங்களாக திறக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. குடியிருப்பு வாசிகள் அவருடன் பேசுவதற்காக செவ்வாய்க்கிழமை மாலை கதவை தட்டிப் பார்த்துள்ளனர். உள்ளிருந்து யாரும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த குடியிருப்பு வாசிகள் கல்பனாவின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர் .அவர்கள் தொலைபேசி மூலம் கல்பனாவை தொடர்பு கொள்ள முயன்ற போதும் பதில் இல்லை இது பற்றி போலீசாரக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்த போலீசார் முன் பக்க கதவை திறக்க முயன்றனர் முடியாததால் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கட்டிலில் தூங்குவதுபோல மூர்ச்சையாகிக் கிடந்த கல்பனாவை மீட்டு , மருத்துவமனை ஒன்றுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கல்பனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.