
கரப்பான் பூச்சிகளை விரட்ட 2 முதல் 3 கப் வேப்ப இலைகளை தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் கரப்பான் பூச்சிகள் நடமாடும் பகுதிகளில் அந்த தண்ணீரை தெளிக்கவும். இதனால் கரப்பான் பூச்சிகள் அங்கிருந்து ஓடிவிடும். கரப்பான் பூச்சியிலிருந்து விடுபட பேக்கிங் சோடாவுடன் சிறிது சர்க்கரை சேர்க்கவும். அதனை கரப்பான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் வைக்கவும். இதனால் கரப்பான் பூச்சிகள் ஓடிவிடும். புதினா எண்ணெயில் உப்பு மற்றும் தண்ணீர் சேர்க்கவும். அதை கரப்பான் பூச்சிகள் இருக்கும் இடங்களில் தெளித்தால், அதன் தொல்லையிலிருந்து விடுபடலாம்.