காலம் காலமாக பாட்டி வைத்தியமே நமது நோய்களை அதிவிரைவில் சரி செய்து விடுகிறது, அந்த பாட்டி வைத்தியத்தின் பற்றிய நன்மைகளை தெரிந்து கொள்வோம்..
கர்ப்பப்பை கோளாறு குணமாக தினசரி ஒரு நெல்லிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் நெல்லி ரத்தத்தை சுத்தம் செய்யும், மேலும் சுகப்பிரசவமாக குங்கும பூவை வெற்றிலை பாக்குடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம், அதேபோல் மாதவிலக்கில் ரத்தப்போக்கு நிற்க இலவங்கப்பட்டை பொடி செய்து 2 கிராம் அளவு தினமும் சாப்பிட வேண்டும், மேலும் மலச்சிக்கல் தீர முட்டைக்கோசை பொடி பொடியாக அரிந்து மிளகு சீரகம் இஞ்சி பூண்டு, வெங்காயம் சேர்த்து சூப் வைத்து இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் குடிக்கவும், மேலும் நன்கு பசி எடுக்க இஞ்சி கிராம்பு, சோம்பு இவைகளை வாயில் போட்டு மென்று வெந்நீரில் வாய் கொப்பளிக்கவும், அதேபோல் பல் வலி தீர மிளகுத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கவும் கிராம்பு தைலம் சேர்த்து பல் ஈறுகளில் தடவலாம், கெட்ட கொழுப்பு கரைய பசலைக் கீரையுடன் மிளகு பூண்டு வரமிளகாய் சேர்த்து கூட்டு அல்லது குழம்பு வைத்து சாப்பிட்டு வரலாம், சர்க்கரை சரியாக வெந்தயம் நாவல் கொட்டை நெல்லி சுக்கு ஓமம் இவைகளை சேர்த்து பொடியாக்கி வெந்நீரில் கலந்து இரண்டு வேலையும் குடிக்கலாம், காயங்கள் ஆற வேப்ப மரத்தின் கொழுந்து இடியுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து காயங்கள் அல்லது புண்கள் மீது தடவ வேண்டும்..!!




