வீட்டில் இந்த தவறுகளை செய்யவே கூடாது..!! செல்வம் தங்காது ஜாக்கிரதை..!!

பொதுவாக வீடுகளில் நாம் செய்யும் சில செயல்கள் ஆன்மீக ரீதியாக தவறுகளை ஏற்படுத்தும். அவ்வாறான தவறுகளை நாம் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

இந்த தவறுகளை நாம் சாதாரணமாகவும் எடுத்துக் கொள்ளக்கூடாது. வீட்டில் செல்வம் தங்காமல் செல்வதற்கும், ஆரோக்கியத்தில் குறைவு ஏற்படுவதற்கு இவைகள் காரணமாகவும் அமைகின்றது.

அந்த வகையில் நம் வீட்டில் செய்யக்கூடாத ஆன்மீக டிப்ஸ் சிலவற்றை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் செய்யக்கூடாத ஆன்மீக டிப்ஸ்

நான்காம் பிறைச் சந்திரனைப் பார்க்கக்கூடாது. இலவசமாக யாரிடமும் எள் பெறக்கூடாது.

நம்மை விடப் பெரியவர்கள் முன் கால் மேல் கால் போட்டு அமரக்கூடாது.

விளக்கில் அல்லது நெருப்பில் தீப்பற்றிய துணியை மீண்டும் உடுத்திக் கொள்ளக் கூடாது.

வீட்டில் எலுமிச்சை மூடியில் விளக்கேற்றக் கூடாது. விளக்கு வைத்த பின்பு தலை வாருதல், முகம் கழுவுதல், பேன் எடுத்தல் போன்றவற்றைச் செய்யக்கூடாது.

இரண்டு கன்னங்களிலும் கைகளை வைத்துக்கொண்டு நிற்பதோ, உட்கார்ந்து கொள்வதோ கூடாது.

பட்டு வேட்டி மற்றும் புடவைகளை அணிந்துக் கொண்டு வைதீக காரியங்களைச் செய்யக்கூடாது.

தலைமுடிக்கு மந்திரங்களை எளிதில் கிரகிக்கும் தன்மை உண்டு. தலைமுடியைக் கொண்டு பில்லி சூனிய ஏவல் வைக்கவும் செய்வர்.

எனவே தலைமுடியையும, நகத்தையும் எக்காரணம் கொண்டும் பிறர் பார்க்கும் வகையில் எறியலாகாது.

Read Previous

IND vs SL: சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஜெய்ஸ்வால்..!! வெளியான முக்கிய அப்டேட்..!!

Read Next

அதிக சுவை தரும் ஹைதராபாத் மீன் தம் பிரியாணி செய்முறை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular