நம் நாட்டில் மத்திய அரசு குடிமக்களை கருத்தில் கொண்டு அஞ்சல் அலுவலகம் மூலம் முதுமை காலத்தில் உதவும் வகையில் “மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்”, என்ற திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தில் இணையும் நபர்களுக்கு மாதம்தோறும் ரூ.20,500 வருமானமாக வழங்கப்பட்டு வருகிறது. அதாவது இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் வைப்பு தொகைக்கு மாதம் ரூ.20,500 வட்டியாக மத்திய அரசு மூலம் செலுத்தப்பட்டது. இந்த சேமிப்பு திட்டத்தின் பலனை 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே பெற முடியும் .அது மட்டுமல்லாமல் இந்த பலனை சூப்பர் ஆனிவேசன், வி.ஆர்.எஸ் அல்லது சிறப்பு வி.ஆர்.எஸ் பெற்றவர்களும் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் இணையும் நபர்கள் ஆயிரம் மடங்குகளில் முதலீடு செய்யலாம். அதாவது பயனர் ரூ.1000 ரூபாய் முதல் ரூ.30 லட்சம் வரை இதில் முதலீடு செய்யலாம். இவ்வாறு முதலீடு செய்யப்படும் வைப்பு தொகைக்கு அரசனது 8.2% வட்டி வழங்குகிறது. இந்த வட்டி தொகையானது ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய மாதங்களில் பயனர்களில் கணக்கில் செலுத்தப்படும். இந்த சேமிப்பு திட்டத்தின் முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகளாகும் மேலும் வருமான வரி சட்டப்பிரிவு 80 சிஎன் படி பயனர்கள் 1.5 லட்சம் வரி விலக்கு பெறுவார்கள்.