
இன்றைய பருவநிலை மாற்றத்தினால் மற்றும் மனிதர்களின் தேவையற்ற பயன்பாட்டின் காரணத்தினாலும் கொசுக்கள் முட்டை இட்டு பெருகி கொண்டிருக்கிறது, கொசுவின் வாழ்விடமாக தீங்கு நீர் தேங்காய் சிரட்டை தொட்டி மற்றும் செடிகள் இவற்றில் தங்களின் இனப்பெருக்கங்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது..
அப்படிப்பட்ட கொசுவை வீட்டிலிருந்து விரட்டுவது எப்படி என்று பார்ப்போம் மாலை நேரங்களில் வீட்டில் உள்ள ஜன்னல்கள் மற்றும் கதவுகளை சூரியன் மறைவதற்குள் மூடிவிட வேண்டும், வீட்டை சுற்றியும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும், கொசுவின் எதிரி காற்று தான் முடிந்தவரை வீட்டில் காற்றாடியை சுற்ற விட்டுக் கொண்டிருந்தால் கொசு வீட்டில் தங்காது, சிறிய தட்டில் எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி அதில் கிராம்பை குத்திவிட்டால் கொசு இருக்கவே இருக்காது, பூண்டை தண்ணீரில் கொதிக்க வைத்து ஸ்பிரே போல் வீடு சுற்றி அடித்தால் கொசு உடனே வெளியேறிவிடும் இவற்றை பயன்படுத்தினால் கொசு வீட்டை விட்டு வெளியேறிவிடும்..!!