வீட்டில் கண்ணாடி உடைந்தால் கெட்ட சகுனம்..!! பிரச்சனைகளுக்கான அறிகுறி..!!

பொதுவாகவே வீட்டில் பெரியவர்கள் அடிக்கடி இந்த சகுனங்கள் பற்றி பேசுவார்கள். அவர்கள் சின்ன சின்ன விடயங்களுக்கு கூட வாஸ்து சாஸ்திரம் பார்ப்பார்கள்.

அப்படி நாம் தினமும் பயன்படுத்தும் ஒரு பொருள் கை தவறி கீழே விழுந்து உடைந்து விட்டால் அல்லது சிந்தி விட்டாலோ உடனே அவர்கள் சொல்லும் வார்த்தை சகுனம் சரியில்லை என்று.

அப்படி வீட்டில் ஒரு  கண்ணாடி கீழே விழுந்து சிதறி விட்டால் நல்லதா? கெட்டதா? என்று விபரங்களைத் தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகின்றோம்.

கண்ணாடி உடைந்தால்:

வீடுகளில் கண்ணாடி உடைதல் என்பது பொதுவான ஒரு விடயமாக பார்க்கப்பட்டாலும் ஜோதிடத்தில் அதற்கு பல பலன்கள் இருக்கிறது.

இந்துக்களைப் பொறுத்த வரை வீட்டில் கண்ணாடி உடைந்தால் நிதி இழப்பை சந்திக்க நேரிடும் அல்லது ஆரோக்கியம் பாதிப்படையும்.

வீடுகளில் உடைந்த பொருட்களை வைத்திருந்தால் அது உங்கள் வீட்டிற்கு நேர்மறை எண்ணங்களைக் கொடுக்கும்.

கண்ணாடி மற்றும்  கண்ணாடியில் செய்யப்பட்ட பொருட்கள் திடீரென உடைந்தால் வீட்டில் மற்றும் தொழிலில் பொருளாதார நஷ்டம் வந்து சேரும்.

வீட்டில் இருக்கும் ஜன்னல், கதவுகளில் திடீரென உடைந்துப் போனால் அல்லது விரிசல் ஏற்பட்டால் எதிர்காலத்தில் பெரிய பெரிய பிரச்சினைகள் காத்திருக்கும் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கான அறிகுறியாகும்.

ஒருவரின் படுக்கையறையில் கண்ணாடி உடைந்து அல்லது விரிசல் ஏற்பட்டால் வரப்போகும் பிரச்சினைகளுக்கான அறிகுறியாகும்.

Read Previous

அடிக்கடி உடலுறவு வைப்பது உங்கள் ஆயுளை அதிகரிக்குமா?..

Read Next

படித்ததில் பிடித்தது: ஒரு பெண், தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular