
திருச்சி உய்யக்கொண்டான் திருமலை அருகே சண்முகா நகரைச் சேர்ந்தவர் வேணுகோபால் மனைவி அருந்ததி (75). கணவர் இறந்த நிலையில், இவர் தனது மகனுடன் வசித்து வந்தார்.
சமையல் செய்த இவர், வீட்டில் உள்ள எரிவாயு உருளையை அணைக்காமல் வைத்திருந்தாராம். இதனால் எரிவாயு கசிந்திருந்தது. இந்நிலையில் காலை பூஜை அறையில் சுவாமிக்கு விளக்கு ஏற்றியபோது, எரிவாயு தீப்பற்றி, மூதாட்டியின் உடல் முழுவதும் பரவியது. இவரது சப்தம் கேட்டு, பக்கத்து அறையிலிருந்த அவரது மகன் விஜயராகவன் வந்து, தீயை அணைத்து, மூதாட்டியை உறையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அருந்ததி உயிரிழந்தார். இது குறித்து சோமரசம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.