
வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா..?? வாஸ்து சொல்லும் ரகசியங்கள் இதுதான்..!!
வீட்டில் செல்வம் பெருக ஒரு சில வாஸ்து ரகசியங்களை எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
உங்கள் வீட்டின் கதவு வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி திறக்க வேண்டும். இது வீட்டிற்கு செல்வத்தையும் செழிப்பையும் கொண்டுவரும். வீட்டின் வாசலில் பெயர் பலகை வைப்பதும் நேர்மறையான ஆற்றலை அதிகரித்து பணவரவை பெருக்கும். எப்போதும் வீட்டிற்கு வண்ணம் தீட்டும் போது புத்துணர்ச்சியூட்டும் இடங்களை தேர்ந்தெடுத்து தீட்டுங்கள். வீட்டின் தென் கிழக்கு திசையில் மணி பிளான்ட் செடி வளர்ப்பது செல்வத்தை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. உங்கள் வீட்டில் ஒரு சிறிய அளவிலான நீரூற்றை உருவாக்கும் போது செழிப்பை அது தக்க வைக்கும். செல்வம் அறிவு வளம் என அனைத்தும் பெருக மகாலட்சுமி தேவியின் சிலையை வைத்து வழிபடுங்கள்.