
Oplus_131072
இந்த நவீன காலகட்டத்தில் வேலை சுமையின் காரணமாகவும் மன அழுத்தத்தின் காரணமாகவும் வீட்டில் உள்ள பெரிய பெரிய பிரச்சனைகள் இதை மனதில் போட்டு மன அழுத்தத்தை உண்டாக்குவதன் காரணமாகவும் ஒரு சிலருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் வீட்டில் தனியாக இருக்கும் பொழுது மாரடைப்பு வந்தால் நம்மளை நாமே எவ்வாறு காப்பாற்றிக் கொள்வது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
திடீரென்று நமக்கு தோள்பட்டை வலி மற்றும் இதயத்தில் அதிகமான வலி அந்த வலியை நம்மால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை என்று உணரும்போது மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் இதயத்தில் ஆரம்பிக்கும் வலி தோள்பட்டை வரை பரவி அந்த வலியானது தாங்கிக் கொள்ள முடியாத பட்சத்தில் இருக்கும். இந்நிலையில் மாரடைப்பு ஏற்படும்போது வீட்டில் யாரும் இல்லாத பட்சத்திலும் நீங்களே மருத்துவமனைக்கு செல்ல முடியாத பட்சத்திலும் உடனே தொடர்ந்து ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும். ஒவ்வொரு முறையும் இரும்புவதற்கு முன்னர் மூச்சை நன்கு இழுத்து விட வேண்டும். இருமல் என்பது சாதாரணமாக இருக்கக் கூடாது நல்ல ஆழமாக இரும்ப வேண்டும். இரும்புவதால் இருதயம் நிற்ப்பதிலிருந்து தொடர்ச்சியாக துடித்துக் கொண்டே இருக்க உதவும் இதனால் ரத்த ஓட்டம் சீரடைந்து இதயம் சீராக துடிக்கும். பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல முடியும். கண்டிப்பாக இதையெல்லாம் தெரிஞ்சு வைத்து கொள்ளுங்கள்.