
பொதுவாகவே நம் முன்னோர்களின் காலத்திலிருந்து தற்போதுள்ள இன்றைய காலம் கோட்டை வரை அனைவருமே செவ்வாய் வெள்ளிகளில் விளக்கேற்றி சாமி கும்பிடுவார்கள். சில வீடுகளில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பாக பூஜை செய்து பிரசாதங்கள் கூட வழங்குவார்கள். இது நம் நாட்டின் பல வீடுகளில் பாரம்பரிய வழக்கம். வெள்ளி மற்றும் செவ்வாய் நாட்களில் விளக்கேற்றி பூஜை செய்தால் வீட்டிற்கு நிறைய பயன்கள் கிடைக்கும் இவ்வாறு வழிபடுவது மிகவும் ஒரு விசேஷமாகும்.
ஆனால் தினந்தோறும் வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றினால் எவ்வளவு பயன்கள் இருக்கிறது என்பதை பற்றி தற்போது பார்க்கலாம். தினம்தோறும் வீட்டின் பூஜை அறையில் காலையில் அல்லது மாலையிலோ விளக்கேற்றி சாமி கும்பிட்டால் முகத்தின் பொலிவு அதிகரிக்கும் என்று சாஸ்திரம் சொல்லுகிறது. கார்த்திகை மாதத்தில் 30 நாட்களும் பெண்கள் உங்கள் வீட்டில் உள்ள பெண் குழந்தைகளை விளக்கேற்ற சொல்லுங்கள் இவ்வாறு நீங்கள் செய்தால் அதன் பலனை நீங்கள் கண்கூடாக பார்க்க முடியும். மேலும் தினமும் வீட்டில் விளக்கு ஏற்றுவதன் மூலம் மகாலட்சுமியின் அருள் கிட்டும். பெண்கள் பெண் குழந்தைகள் என்றாலே மகாலட்சுமியின் மறு உருவம் என்று சொல்லுவார்கள் தினமும் பெண்கள் தன் வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வந்தால் அவர்களின் முகம் பொன்னாக ஜொலிப்பதை பார்க்கலாம். அவர்களது வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகி செல்வம் செழிப்பதை பார்க்கலாம். ஒரு சில வீட்டில் நிம்மதி இல்லாமல் பல பிரச்சினைகள் இருக்கும் அவ்வாறு இருக்கும் போது அந்த வீட்டில் வசிப்பவர்கள் பெண்கள் அல்லது பெண் குழந்தைகள் தினமும் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் மனநிம்மதி என்பது அதிகரிக்கும். தினமும் வீட்டில் விளக்கு ஏற்றினால் வேலை தேடுவோருக்கு நல்ல வேலை கிடைக்கும். இன்பம் நிரம்பி வழியும். முக்கியமாக குழந்தை பாக்கியம் உண்டாகும். குறிப்பாக சூரிய உதயத்திற்கு முன் பிரம்ம முகூர்த்த நேரத்தில் பூஜை செய்து பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்டால் பல யோகங்கள் உங்களைத் தேடி வரும் என்பது குறிப்பிடத்தக்கது. மாலையில் சூரியன் மறைவதற்கு முன்னதாக பிரதோஷ காலத்தில் விளக்கேற்றி வழிபட்டால் குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.