வீட்டில் துடைப்பத்தை இந்த இடத்தில் மட்டும் வைக்காதீங்க..!! செல்வம் தங்கவே தங்காதாம்..!!

பொதுவாக நமது வீட்டை சுத்தம் செய்வதற்கு வைத்திருக்கும் துடைப்பத்தை எவ்வாறு கையாள வேண்டும், எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

துடைப்பத்தை எந்த இடத்திலும் வைக்கலாம் என்று நீங்கள் நினைத்தால், உங்களது வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் குறைந்துவிடும் என்பதை மறந்து விடாதீர்கள்.

உத்தரபிரதேச மாநிலத்தில் சம்பலில் உள்ள கோவில் ஒன்றிற்கு பக்தர்கள் துடைப்பத்தை காணிக்கையாக வழங்குகின்றார்கள். தோல் தொடர்பான வியாதிகள் குணமாக இவ்வாறு துடைப்பத்தை காணிக்கை வழங்கி வருகின்றனர்.

துடைப்பத்தை இப்படி மட்டும் வைக்காதீங்க

வீட்டில் கூட்டுவதற்கு ஒரு துடைப்பமும், வெளியில் கூட்டுவதற்கு மற்றொரு துடைப்பமும் வைத்துக்கொள்ள வேண்டும்.

தொழில், வியாபாரம் செய்யக்கூடிய வணிகர்கள் துடைப்பத்திற்குச் சிறப்பு மரியாதை கொடுக்க வேண்டுமாம்.

துடைப்பம் தானே என கடையில் உள்ள துடைப்பத்தை அவமரியாதை செய்தாலோ, துடைப்பத்தை எட்டி உதைத்தாலோ வியாபாரிகளின் பணம் இழப்பு அல்லது சந்தையில் உங்களின் பணம் மாட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது.

எனவே துடைப்பம் வீட்டிலும், கடையிலும் சரியான இடத்தில் வைக்கப்பட வேண்டும்.

துடைப்பத்தில் முடி அல்லது நூல் சிக்கிக்கொண்டால் அதனை காலின் மூலம் எடுக்காமல் கையால் மட்டும் தான் எடுக்க வேண்டும்.

துடைப்பத்தை யாருக்கும் தானமாகவோ, பணம் கொடுத்து வாங்கிக் கொடுக்கவோ கூடாது.

முந்தைய காலத்தில் வெளியில் மரத்தடியில் மற்றவர் கண் படாதவாறு துடைப்பத்தை வைப்பார்கள். காரணம் பறவைகள் அதன் குச்சியை எடுத்து கூடு கட்ட உதவியாக இருக்குமாம். இவ்வாறு பறவைகள் நமது துடைப்பத்தின் குச்சியால் கூடு கட்டினால் மிகவும் நல்லதாம்.

மேலும் வீடு, அலுவலகம் அல்லது கடையில் வைக்கப்பட்டுள்ள துடைப்பத்தை வெளியாட்கள் யாரின் கண்ணிலும் படாதபடி கீழே படுக்க வைப்பது போன்று இருக்க வேண்டும்.

ஒரு சிறு குழந்தை திடீரென வீட்டை துடைக்க ஆரம்பித்தால், வீட்டிற்கு திடீரென விருந்தினர் வருகை தருவார் என்று அர்த்தமாம்.

Read Previous

செய்முறை | கமகமக்கும் வாசனையில் மீன் பிரியாணி தயாரிக்கும் முறை..!!

Read Next

Tips Tips | தினமும் உடலுறவு கொள்வதால் ஏற்படும் 10 நன்மைகள் இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular