வீட்டில் பண வரவு பெருக, குபேர விளக்கு பூஜையை கண்டிப்பாக செய்து பாருங்கள்.!!

பொதுவாக நமக்கு பலருக்கும் வீட்டில் செல்வ வளம் பெருக வேண்டும். பணம் வரவு அதிகரிக்க வேண்டும். மகிழ்ச்சி நிலைக்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கும்.

அதன்படி வீட்டில் அனைத்து விதமான செல்வங்களும் பெருகி மகிழ்ச்சி அதிகரிக்க நாம் வீட்டு பூஜை அறையில் குபேர விளக்கு பூஜை செய்வது மிக நல்ல பயன் கிடைக்கும், குபேர விளக்கு பூஜைக்கு செய்ய தேவையான பொருட்கள்

 1. குபேர விளக்கு
 2. நல்லெண்ணெய் அல்லது நெய்
 3. பச்சைதிறி
 4. ஐந்து கற்கண்டுகள்
 5. மஞ்சள் மற்றும் குங்குமம்
 6. பச்சரிசி
 7. ஐந்து ரூபாய் நாணயம்
 8. எலுமிச்சை பழம்
 • அதிகாலை எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து செம்மண் பட்டையிட்டு அலங்கரிக்க வேண்டும். பின்பு வீட்டு வாசலில் நிலைபடியில் மஞ்சள் குங்குமம் பூச வேண்டும்.
 • வாசலில் பச்சரிசி மாவால் கோலம் போட வேண்டும், எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி ஒரு பாதி மஞ்சளும் மற்றொரு பாதி குங்குமம் தடவி வீட்டின் நிலை வாசலில் வைத்து விட வேண்டும்.
 • நிலை வாசலில் மலர்களால் அலங்கரித்து விட்டு குபேர விளக்கு மற்றும் குபேர விளக்கு வைக்கும் தட்டிற்கு மஞ்சள் குங்குமம் வைத்து பொட்டு வைக்க வேண்டும்.
 • தட்டில் பச்சரிசி மற்றும் ஐந்து ரூபாய் நாணயம் சில மலர்கள் வைத்து குபேர விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தினமும் பூஜை அறையில் விளக்கேற்றும் போது குபேர விளக்கு ஏற்றி அலங்காரம் செய்து மனப்பூர்வமாக கடவுளை நினைத்து வேண்டி வந்தால் நினைத்த காரியம் கண்டிப்பாக நிறைவேறும்.

வாரத்திற்கு செவ்வாய், வெள்ளி என இரண்டு நாட்கள் குபேர விளக்கை ஏற்றி பூஜை செய்தால் வீட்டில் மகிழ்ச்சி பெருகுவது, பண வரவு அதிகரிப்பது, சண்டை, சச்சரவுகள் குறைவது, நாள்பட்ட கடன் தொல்லை குறைந்து நிம்மதி பெருகுவது, சேமித்து வைத்திருக்கும் செல்வம் அதிகரிக்கும் போன்றவை நடைபெறும்.

Read Previous

இப்படி உடலுறவு வைத்தால், உங்களுக்கு இரண்டு மடங்கு திருப்தியை தரும்..!!

Read Next

தனிமை தந்த வலி.. அதனை துறக்க வழி இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular