
அகலமான தொட்டி அல்லது பிரண்டு இன்ச் க்ரோ பேக்கில் புதினா தண்டுகளை நட்டு வைத்தால் அதிக இலைகளுடன் புதினா செழிப்பாக வளரும். வீட்டில் புதினா செடி வளர்ப்பதற்கான டிப்ஸ்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க..
வீட்டு தோட்டம் அமைக்க வேண்டும் என நினைப்பவர்கள் புதினா செடியிலிருந்து வளர்ப்பை தொடங்குவது சிறந்த ஆரம்பமாக இருக்கும் செடி வளர்ப்பதற்கு பெரிய இடம் இல்லை என சொல்பவர்கள் வீட்டின் ஜன்னல்களின் கூட புதினாவை வைத்து வளர்க்க முடியும் அது எப்படி? என்ற கேள்வி உங்களிடம் உள்ளதா புதினா வளர்ப்பதற்கான உரங்கள் என்ன என்ற கேள்வியும் உங்களிடம் உள்ளதா? முழு விவரங்களையும் இந்த செய்தி தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம் வாங்க, தரமான தண்டுகள் சமையலில் புதினா இலைகளை பயன்படுத்திவிட்டு குப்பை என வழக்கமாக நாம் தூக்கி எரியும் தண்டு போதும் புதினா வளர்ப்பை மேம்படுத்துவதற்கு முதலில் மூன்று தரமான புதினா தண்டுகளை எடுக்கவும் இரண்டாக கிளைத்திற்கும் புதினா தண்டு என்றால் கூடுதல் சிறப்பு இப்போது தண்டின் அடிப்பகுதியில் உள்ள இலைகளை நீக்கிவிட்டு மேலே இரண்டு இலைகள் மட்டும் விட்டு வைக்கவும், வாட்டர் மெத்தட் இப்போது ஒரு கண்ணாடி டம்ளரில் பாதி அளவு நீர் எடுக்கவும் அதில் நாம் எடுத்து வைத்துள்ள தண்டுகளை வைத்து டம்ளரில் உள்ள நீரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மாற்றிக் கொள்ள வேண்டும், மண்ணில் நடும் முறை : மூன்று முதல் நான்கு நாட்களுக்கு பின்னர் புதினா தண்டுகள் வேர் விட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம் இதே போல் பத்து நாட்களுக்கு வைத்து விடுங்கள் பின்னர் இந்த தண்டுகளை மண்ணில் நட வேண்டும் புதினா படர்ந்து வளரக்கூடியது என்பதனால் புதினா வளர்ப்புக்கு எப்போதும் அகலமான தொட்டி அல்லது பிரண்டு இன்ச் குரோபேக் பயன்படுத்த வேண்டும், அறுவடை இப்போது வேர்விட்டிருக்கும் புதினா தண்டுகளை மண்ணில் ஊன்றி தேவையான தண்ணீர் ஊற்ற வேண்டும் தொட்டியில் வைத்ததும் புதினா சாய்ந்தது போல் இருக்கும் ஆனால் சிறிது நேரம் கழித்து எழுந்து நின்று விடும் செடியை தொந்தரவு செய்யாமல் அப்படியே விட்டால் மூன்று வாரங்களில் அதிக இலையுடன் செழிப்பான புதினா பார்க்க முடியும்…!!