வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக குடியிருக்க இதை தினமும் மறக்காமல் செய்யுங்க..!!
காலையில் எழுந்ததும் முகத்தை கழுவி விட்டு முதலில் வீட்டின் பின்புற வாசலை திறந்த பிறகு தான் முன்புற வாசலை திறக்க வேண்டும். பின்புற வாசல் இல்லை ஒரே வாசல் தான் உள்ளது என்கிறவர்கள் முதலில் ஜன்னலை திறந்து வைத்துவிட்டு பிறகு வாசல் கதவை திறக்க வேண்டும் வாசல் கதவை காலையில் திறக்கும் போது லட்சுமி தேவி நமது வீட்டுக்குள் வரவேண்டும் என வேண்டிக் கொண்டு கிரகலட்சுமி கிரகலட்சுமி என மூன்று முறை சொல்லிவிட்டு கதவை திறக்க வேண்டும். வாசல் தெளித்த மங்களகரமாக கோலமிட வேண்டும். வீட்டின் நிலை வாசலில் இரண்டு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். குளித்துவிட்டு வீட்டில் துளசி செடி இருந்தால் அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து தண்ணீர் ஊற்றி வழிபட வேண்டும். துளசி மாடத்தில் விளக்கு ஏற்ற வேண்டும்.




