
செல்லப்பிராணிகள் உங்களை கடிப்பது அதன் எச்சில் மற்றும் அதன் ரோமங்கள் உங்களுக்கு பலவிதமான நோய்களை உண்டாக்க வாய்ப்பு உள்ளது அப்படி செல்ல பிராணிகளால் எந்த மாதிரியான நோய்கள் உங்களுக்கு பரவலாம் என அறிந்து கொள்வோம்..
வெறி பிடித்த நாய் பூனை மற்றும் பிற பாலூட்டிகள் மூலம் இந்த ரேபிஸ் வைரஸ் உங்களுக்கு பரவலாம் பாதிக்கப்பட்ட விலங்குகள் உங்களை கடிக்கும் போது இத்தகைய பிரச்சனை ஏற்படுகிறது இதனால் ரேபிஸ் நோய் உங்களை தாக்க வாய்ப்புள்ளது. கோழி போன்ற பறவைகள் மூலம் இன்புளூயன்சா வைரஸ் பரவுவதால் இந்த பறவை காய்ச்சல் நோய் ஏற்படலாம். இதனால் சுவாச நோய் தொற்றுகள் உடல் நல பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இது ஒரு ஒட்டுண்ணி வகை நோயாகும் பாதிக்கப்பட்ட பூனையின் மலத்தின் வழியாக இது பரவுகிறது ஒட்டுண்ணி தொற்று மூலம் இது ஏற்படலாம் இந்த நோயின் பெயர் டோக்ஸோபிளாஸ்மோசிஸ். கால்நடைகள் நாய்கள் பூனைகள் மற்றும் பறவைகள் போன்றவை அசுத்தமான நீர் அல்லது உணவே உட்கொள்வதன் மூலம் அல்லது பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் நேரடி தொடர்பு கொள்வதன் மூலம் கிரிப்டோஸ் போரிடி யோசிஸ் நோய் பரவுகிறது. கால்நடைகள் ஆடுகள் மற்றும் நாய்கள் போன்ற பாதிக்கப்பட்ட விலங்குகளின் திரவங்கள் மற்றும் இந்த விலங்குகளின் பால் மற்றும் இறைச்சியுடன் மூலம் இதுவும் மனிதர்களை பரவுகிறது இந்த நோயின் பெயர் புருசெல்லாசிஸ். கோழி கால்நடைகள் நாய்கள் மற்றும் பூனைகள் போன்றவை கேம்பிலோபாக்டீரியோசிஸ் மூலம் பாதிக்கப்படும் போது இவற்றின் இறைச்சி சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது நேரடி நோய் தொற்று மூலமாகவோ பரவுகிறது. பூனைகள் நாய்கள் மற்றும் பிற வீட்டு செல்ல பிராணிகள் ஒரு சில வகை பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படும் தற்போது ரிங் வார்ம் அல்லது ஆந்த்ராக்ஸ் எனப்படுகிறது. பறவைகள் குறிப்பாக கிளிகள் புறாக்கள் போன்ற பறவைகளின் நீர் துளிகள் அல்லது சுரப்புகளை கொண்ட தூசி துகள்களையும் நாம் உள்ளிழுப்பதன் மூலம் இந்த நோய் மனிதர்களுக்கு பரவுகிறது. இந்த நோயின் பெயர் சிட்டாகோசிஸ் அதாவது கிளிக்காச்சல்..!!