வீட்டிற்கு வருபவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுப்பது ஏன் தெரியுமா..??

 

நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே வீட்டிற்கு வருபவர்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கொடுப்பார்கள். குறிப்பாக, வீட்டிற்கு வருபவர் தெரிஞ்சவராக இருந்தாலும் சரி தெரியாதவராக இருந்தாலும் சரி முதலில் குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்துவிட்டு தான் மற்ற விஷயங்களை பேச தொடங்குவார்கள். இவ்வாறு வருபவர்களுக்கு ஏன் முதலில் தண்ணீர் குடிப்பதற்கு கொடுக்கிறார்கள் அதற்கான காரணங்கள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

வீட்டுக்கு வருபவர்களுக்கு முதலில் தண்ணீர் கொடுப்பதற்கு மிகச்சிறந்த காரணங்கள் உள்ளன. தண்ணீருக்கு மனிதர்களின் மனநிலையை மாற்றும் அற்புதமான சக்தி இருக்கிறது. ஒரு மனிதனின் கோபதாபத்தையும், வெறுப்புணர்ச்சியையும் மாற்றும் ஆற்றல் இந்த தண்ணீருக்கு தான் உள்ளது. ஏதாவது சண்டை சச்சரவு வரும்போது ஒருவரை ஒருவர் எதிர்த்து பேசி நடத்தும் போது அவர்களை விளக்க வருபவர் ‘முதல்ல தண்ணி குடிப்பா’ அப்புறமா பேசிக்கலாம் என்று கூறுவார்கள். சண்டையிடும் நபர் தண்ணீர் குடித்ததும் தனது பேச்சில் ஒருவித சாந்தமும் அமைதியும் தெரியும். இதன் அடிப்படையில் தான், வீட்டிற்கு வருபவர்களுக்கு தண்ணீர் கொடுக்கும் பழக்கத்தை நமது முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளனர். வீட்டுக்கு வருபவரின் மனநிலை எதுவாக இருந்தாலும் சரி மற்றும் அவர்களின் எண்ணங்கள் எதுவாக இருந்தாலும் சரி தண்ணீரை குடித்தால் அந்த கெட்ட தாக்கத்தின் பாதிப்பு நம்முடைய இல்லத்தை பாதிக்காது என்று கூறுவார்கள்.

Read Previous

கணவன், மனைவி சண்டை.. ஆண், பெண் யோசிப்பது என்ன?.. படித்ததில் பிடித்தது..!!

Read Next

வாழ்க்கையைப் பற்றி மகளுக்கு அழகாக எடுத்துக் கூறிய அம்மா..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular