
பெற்றோர்கள் என்னதான் சீராட்டி பாராட்டி வளர்த்தாலும்… 30 வயதிற்கு அப்புறம் அவள் இன்னொரு வீட்டுப் பெண் என்று அவர்கள் நினைக்கும் போது மனம் வருத்தம்தான் செய்கிறது…
சரியான வீட்டில் கட்டி கொடுத்து விட்டால் பிரச்சினை இல்லை… இல்லையென்றால் அவர்கள் மனது அல்லோலப்படும்…
ஒரு குழந்தை வளர்க்கும் போது அவ்வளவு பாசமாக வளர்க்கிறார்கள்… ஆனால் 25 வயதுக்கு மேல் ஒரு பெண் பிள்ளை வளர்ந்து கொண்டிருக்கும் பொழுது… இவளை நாம் கட்டிக் கொடுத்து இன்னொரு வீட்டுக்கு அனுப்ப போகிறோம் என்பது ஆனால்… அவர்கள் மனம் நொந்து தான் போகும்…
ஒரு வீட்டின் குத்துவிளக்கு… ஒரு வீட்டின்… மானம் மரியாதை என்றால் அது பெண்தான்… அந்த அளவுக்கு அவளை பேணி பார்க்க பாதுகாக்க வேண்டும்வேண்டும்… நிச்சயமாக… வரும் மருமகளை உங்கள் பிள்ளை போல பாவித்து நீங்கள் நடத்தினாலே போதும் நாட்டில் ஒரு சில தவறு கூட நடக்காது பெண்களுக்காக… மாமியார் வீட்டில்…
சூடு பட்டவருக்கு தான் அது வலி தெரியும்… பெற்றோர்களுக்கு தான்.. பேணி காத்து வளர்த்த ஒரு பெண்ணை நாம் இன்னொரு வீட்டில் தாரை பார்க்க போகிறோம் என்று அவர்கள் மனம் படும் சொல்லி மாறாது… புகுந்த வீட்டுக்கு செல்லும் பெண் நன்றாக இருந்தால்… அவர்கள் புண்பட்ட மனது புன்னகைக்கும்…
விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப் போவதில்லை என்பார்கள் அது இந்த காலத்திற்கு பொருந்துமா என்பதா இல்லை எனக்கு தெரியாது… வீட்டுக்கு வரும் மருமகளை… நீங்கள் பாராட்டவில்லை என்றாலும்… பழி சொல்லுக்கு ஆளாகாதீர்கள்…