வீட்டுக்கு வீடு வாசப் படி.. தகராறு இல்லாத குடும்பம் இல்லை..!! படித்ததில் பிடித்தது..!!

Oplus_131072

வீட்டுக்கு வீடு வாசப் படி…
தகராறு இல்லாத குடும்பம் இல்லை…
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை..
யானைக்கு தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே என்றக் கவலை
இருந்தால் அணிலுக்கு தன் உடம்பு இவ்வளவு சிறிதாக இருக்கிறதே என்றக் கவலை.
ஏழைக்கு தொப்பையை நிறைப்பது கவலை என்றால்
பணக்காரருக்கு தொப்பையைக் குறைப்பது கவலை.
காதலித்து கல்யாணம் செய்தவரும் கட்டிலைப் பிரித்து போட்டதுண்டு.
பெற்றோர் நிச்சயித்த திருமணத்திலும் பேரன்பு பெருக்கெடுப்பதுண்டு.
அன்பிருந்தும் பணமிருந்தும் சந்ததி இல்லாத குடும்பங்களும் உண்டு.
சந்ததி இருக்கும் குடும்பங்கள் சாப்பாட்டுக்கே திண்டாடுவதும் உண்டு.
அமெரிக்காவில் பகல் என்றால் இந்தியாவில் இருட்டு
பிரச்சனை இல்லாத வாழ்க்கை எவருக்குமே இல்லை.
ஆக அடுத்தவர் நன்றாக வாழ்வது போலவும் நாம் மட்டும் தான் துன்பப்படுவது போலவும் பிரமை வேண்டாம்.
கணவர் வீட்டுக்கு வரும் போதே பிரச்சனையோடு வரக்கூடாது
மனைவியும் அவரை கேள்விக்குறிகளோடே வரவேற்கக்கூடாது.
கணவர் எதையும் அடித்துச் சொல்ல கூடாது
மனைவி எதையும் இடித்துப் பேச கூடாது.
“நீங்க வாங்கின காய்கறி மகா மட்டம் “என்று மனைவி சொன்னால் “எந்த நாய் சொன்னது?” என்ற கணவன் பதில் சொன்னால் தான் பிரச்சனை தன் தவறை ஒத்துக் கொண்டு .”சரி இனிப் பார்த்து வாங்குகின்றேன்” என்றுச் சொல்லி விட்டால் முடிந்தது.
“நீ செய்த சாப்பாடு சகிக்கலை” என்று கணவன் சொன்னால்,
“எனக்குத் தெரிந்த லட்சணம் இவ்ளோதான் நீங்க உங்க அம்மா வீட்டுக்கு பொய் சாப்பிடுங்க” என்ற மனைவி பதில் சொன்னால் தான் பூகம்பம் ஆரம்பம்.
“இன்னிக்கு உடம்புக்கு முடியல நாளைக்கு நன்றாக சமைக்கின்றேன்” என்று சொன்னால் அன்பு வெள்ளம் தான்.
மனைவி புது புடவை உடுத்தினால் ….”இந்தப் புடவை நன்றாக இருக்கு..
அழகா இருக்கே” என்று சொல்லணும் .
கணவன் வெளியிலிருந்து வரும் பொது “ஏன் இப்படி வியர்த்திருகிறது. எளச்சு போய்ட்டீங்களே” என்று அக்கறையோடு மனைவியும் விசாரிக்க வேண்டும்.
மனைவியைக் கணவன் “அம்மா” என்று அழைக்கணும்
கணவனை மனைவி “அப்பா” என்று அழைக்கணும்.
தன் தாயை மனைவி நன்றாக நடத்தினால் கணவனுக்கு நிம்மதி
தன தாய் வீட்டை கணவன் பெருமையாக கூறினால் மனைவிக்கு நிம்மதி.
படுக்கை அறையில் சபையில் பேசுவது போல் பேசக் கூடாது , கணக்கு பண்ணும் நேரத்தில் கணக்கு வழக்குகள் பேசக்கூடாது.
பகலில் நடக்கும் எந்த வாக்குவாதமும் அன்று இரவிற்குள் சரி செய்யப்பட்டு சேர்ந்து விட வேண்டும்.
முக்கியமாக கணவனும் மனைவியும் சிந்திக்க வேண்டிய விஷயம் வார்த்தைகளில் எச்சரிக்கை.
எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம்
சொல்லைக் கொட்டி விட்டால் பொறுக்க முடியாது.
முள்ளால குத்தின காயம் ஆறிடும்
சொல்லால குத்தினா ஆறவே ஆறாது.
ஒருவரையொருவர் அனுசரித்துப் போனால் உலகையே தனக்குள் அடக்கிக் கொள்ள முடியும்.
இரண்டு கை தட்டினால் தான் ஓசை என்பார்கள்..
ஒருவர் கோபம் கொள்ளும் பொது இன்னொருவர் விட்டுக் கொடுக்க வேண்டும்.
வாழ்க இல்லறம்.

Read Previous

தலையணை இல்லாமல் தூங்கினால்… உடலில் என்ன மாற்றம் நிகழும்ன்னு தெரியுமா..??

Read Next

இந்த 5 உண்மை தெரிஞ்சா நீங்க இனிமேல் கால கீழ தொங்கப்போட்டு சாப்பிடவே மாட்டீங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular