வீட்டில் இருந்தபடியே வீட்டு குறிப்புகளையும் ஆரோக்கிய குறிப்புகளையும் நாம் தெரிந்து கொள்ளலாம்..
கொதிக்க வைத்த ஆரிய நீரில் சீரகப்பொடியை போட்டு 12 மணி நேரம் கழித்து குடித்தால் ரத்த கொதிப்பு சீராகும், மண் பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் வாசனையும் வராது விரிசலும் விடாது, தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எல்லை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும், மூளை ஆரோக்கியத்திற்கு வால்நட் உதவுகிறது, மனசோர்வை குறைக்கும் தன்மை மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த பயன் தருகிறது வால்நட், இதயத்திற்கு நல்லது உடல் பருமனை அதிகரிக்கும் தலைமுடி உதிர்வதை குறைக்கும், ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது மேலும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வால்நட் உதவுகிறது, ரத்தம் விருத்தி ஆகும் சருமம் பளபளக்கும் கண் கோளாறுகள் வராது இருமல் கபம் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக உதவுகிறது பேரிச்சம்பழம், வாரத்தில் இரண்டு முறை காளான் சாப்பிடுவதன் மூலம் விட்டமின் செலினியம், பொட்டாசியம் மற்றும் விட்டமின் பி, காப்பர் போன்ற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது, மேலும் முளைகட்டிய வெந்தயம் இதயத்திற்கு மிகவும் நல்லது இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் தொடர்பான பிரச்சனைகள் தவிர்க்கப்படலாம்..!!




