தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தமிழக அரசின் அனைத்து சேவைகளும் ஆன்லைன் மூலமாக நடந்து வருகிறது. அதனை தொடர்ந்து இனி வரும் காலங்களில் ஆன்லைன் மூலம் வீட்டு வரியையும் செலுத்திக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில், அதை பற்றி கீழே விரிவாக பார்க்கலாம்.
வீட்டு வரி ஆன்லைனில் கட்டுவது எப்படி ?
1. முதலில் தமிழக அரசின் அதிகார பூர்வ tnurbanepay.tn.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
2. பிறகு, quick payment என்ற ஆப்ஷனை கிளிக் செய்தவுடன், மற்றொரு பக்கம் ஓபன் ஆகும். அதில், property Tax என்ற ஆப்ஷனை கிளிக் செய்து make payment என்ற இடத்தில் assessment number என்ற ஆப்ஷன் வரும். assessment number என்பது இதற்கு முன் நீங்கள் கட்டிய ரசீதில் இந்த நம்பர் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த நம்பரை இந்த கட்டத்தில் உள்ளிடவும்.
3. அதற்கு கீழே search என்பதை கிளிக் செய்து உங்கள் முகவரிகள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்யவும். பிறகு payable payment என்ற இடத்தில் எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்பதை பதிவிட்டு சமர்ப்பிக்கவும்.
4. கடைசியாக I agree மற்றும் CONFIRM கொடுத்துவிட்டு வங்கி மூலமாக பணம் செலுத்த வேண்டும் என்றால் வங்கியின் பெயரை உள்ளிட்டு MAKE PAYMENT என்பதை கிளிக் செய்யவும். இத்தகைய முறைகள் மூலமாக உங்கள் போனிலிருந்து வீட்டு வரி பணத்தை சுலபமாக நீங்களே செலுத்தி கொள்ளலாம்.




