
வீட்டு வைத்திய குறிப்புகள்..!! வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இவ்வளவு பிரச்சனைகளை சரி செய்ய முடியுமா..??
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே நம் உடலில் இருக்கும் பல பிரச்சினைகளை சரி செய்யலாம். அது என்ன என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம். வெந்தயக் கீரையை அரைத்து தினமும் முகத்தில் பூசி பத்து நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகப்பரு மறையும்.
வெங்காயத்தை நசுக்கி பசு நெய் விட்டு வதக்கி அதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சூடு காரணமாக தோன்றும் மூலநோய் குணமாகும்.
வாரம் ஒரு முறை துளசி தேநீர் குடித்து வந்தால் சளி நீங்குவதோடு மூச்சு திணறல் மற்றும் ஆஸ்துமா வராமல் இது தடுக்கும்.
ஏலக்காயை பொடி செய்து, இது வெண்ணெயுடன் கலந்து காலை மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் கபம் விலகும்.
முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்தால் இருமல் நீங்கும்.
மாங்கொட்டை பருப்பை நன்றாக காய வைத்து தூள் செய்து தேனில் குழைத்து சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் அழியும்.