பொதுவாகவே அனைவருடைய வீடுகளிலும் எறும்பு தொல்லை அதிகமாக இருக்கும். இதனை விரட்டுவதற்கு சாக்பீஸ் மற்றும் பொடி ஆகியவற்றை பயன்படுத்துவோம். ஆனால் அவை ஆபத்தான ரசாயனங்கள் என்பதால் வீட்டில் குழந்தைகள் தொட்டால் அல்லது வீட்டில் உள்ள பாத்திரங்கள் மற்றும் உறவுகளின் மீது பட்டால் அதிக ஆபத்து விளைவிக்க கூடும். எனவே வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி எறும்புகளை இயற்கையான முறையில் விரட்டலாம்.
இலவங்கப்பட்டை எறும்புகளை விரட்டுவதற்கு மிகச்சிறந்ததாகும். அலமாரி மற்றும் ஜன்னல் ஓரங்களில் எறும்புகள் அதிகமாக ஊடுருவி வீட்டுக்குள் வரும் இடங்களில் இலவங்கப்பட்டையின் பொடியை தூவி விடலாம். அடுப்பங்கரை மற்றும் பெட்ரூம் போன்ற இடங்களில் ஒரு காட்டனில் லவங்கப்பட்ட எசன்ஷியல் ஆயிலை நனைத்து வைத்து விடலாம். இதன் வாசனைக்கு எறும்புகள் நுழையாது.
எறும்புகள் உள்ளே நுழையும் இடத்தில் எலுமிச்சை சாற்றை பிழிந்து விடுங்கள் அல்லது எலுமிச்சை தோலை போட்டு வையுங்கள். தரையை கழுவும் போதும் துடைக்கும் போதும் அந்த தண்ணீரில் சிறிதளவு எலுமிச்சை சாற்றை கலந்து பயன்படுத்தலாம். எந்த ஒரு கசப்பான புலிப்பான பொருளும் எறும்புகளை விரட்டி அடிக்கும்.
ஆரஞ்சு எலுமிச்சை பழத்தை போலவே எறும்புகள் உங்கள் வீட்டிற்குள் நுழைவதை தடுக்கும். ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் ஆரஞ்சு தோலை போட்டு அரைத்து பேஸ்ட் செய்து எறும்புகள் நுழையும் இடத்தில் தடவினால் எறும்புகள் அதை தாண்டி உள்ளே வராது. ஆரஞ்சு தோல் ஒரு இயற்கையான எறும்பு கொல்லியாக பயன்படுகிறது.
எறும்புகளுக்கு மிளகை கண்டால் பயம். எறும்புகள் உங்கள் வீட்டிற்குள் நுழையும் இடங்களில் மிளகுத்தூளை தூங்குங்கள். இது எறும்புகளை விரட்டுவதற்கு பெரும் உதவியாக இருக்கும்.
அடுத்ததாக எறும்புகள் இருக்கும் மூலை முடுக்குகளில் எல்லாம் உப்பை தெளிப்பதன் மூலமாக அதனை விரட்டி அடிக்கலாம். சாதாரணமான டேபிள் சால்ட் எனப்படும் தூள் உப்பு இதற்கு பயன்படுத்தலாம். நீரை நன்றாக கொதிக்க விட்டு அதில் நிறைய உப்பை சேர்த்து கரையும் வரை கலக்க வேண்டும். இதனை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றிக் கொண்டு எறும்புகள் நுழையும் இடங்களில் தெளித்தால் எறும்புகள் வராது.
புதினா ஒரு இயற்கையான பூச்சி விரட்டியாக இருப்பதால் இவை எறும்புகளை விரட்டி விடும். புதினாவின் வாசனையை எறும்புகளால் தாங்கவே முடியாது. இதனால் அவற்றை உள்ளே நுழைய விடாமல் தடுக்கிறது. உலர்ந்த புதினா பொடியை எறும்புகள் வரும் இடத்தில் தூவினால் எறும்புகள் வராது.