வீதியில் சண்டையிட்டு தம்பதி நடத்திய துப்பாக்கிசூடில் சிக்கி, 4 வயது சிறுவன் பரிதாப பலி..!! நொடியில் பெற்றோர் கண்மண் சோகம்.!!

அமெரிக்காவில் காரில் சென்று கொண்டிருந்த தம்பதிகள் தங்களுக்குள் ஏற்பட்டுள்ள தகராற்றில் துப்பாக்கி சூடு நடத்தியதில் தங்களது நான்கு வயது உடைய குழந்தை துப்பாக்கி சூட்டில் பலியாகிது அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் தம்பதிகள் தங்களது காரில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது சாலையில் இரண்டு பேரும் ஆவேசமாக சண்டையிட்டுக் கொண்ட நிலையில் திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்த சம்பவத்தில் காருக்குள் இருந்த குழந்தையின் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து உள்ளது. நான்கு வயது குழந்தை கோர் ஆதம்யன்  துப்பாக்கி சூட்டில் உயிரிழந்து உள்ளார். குண்டு அவரின் உடலை துளைத்து காரின் பின்பக்க இருக்கை வரை சென்று உள்ளது.

இது தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சாலையில் சண்டையிட்டு துப்பாக்கி சூடு நடத்திய 29 வயதுடைய இளைஞர் பைரன் பர்குர்ட் மற்றும் 27 வயதுடைய பெண்மணி அலெக்ஸாண்ட்ரியா ஜென்டைல்  ஆகியோரை கைது செய்துள்ளனர். இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Read Previous

“நான் சிறுநீர் கழித்த மரத்தின் பழங்களை சாப்பிடுவார்கள்..!!” பா. ரஞ்சித் சர்ச்சை பேச்சு!!

Read Next

புற்றுநோயால் மூக்கை இழந்த பெண்மணி..!! அலட்சியத்தால் விளைந்த சோகம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular