வெங்காயத்தாளில் நிறைந்துள்ள சத்துக்களும் அதன் பயன்களும்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

வெங்காயத்தாள் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு அற்புதமான கீரையாகும். வெங்காயத்தாளனது சீன பாரம்பரிய மருத்துவத்தில் அதிகம்  பயன்படுத்தப்படுகின்றது. வெங்காயத்தாளனது சாலட் வெங்காயம், சுருள் வெங்காயம், பச்சை வெங்காயம் என பலவாறு அழைக்கப்படுகிறது. இது சாம்பார் வெங்காயம், பல்லாரி, பூண்டு ஆகியவற்றின் குடும்பத்தை சேர்ந்த கீரையாகும். வெங்காய தாளின் மேற்பகுதியானது பச்சையாகவும், அடிப்பகுதி வெள்ளையாகவும் இருக்கும்.

வெங்காயத்தாளில் குறைந்த கலோரிகளே இருக்கின்றன. மேலும் வெங்காயத்தாளில் வைட்டமின் சி, பி2 மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. வெங்காயம் போலவே வெங்காயத்தாளிலும் கூட கந்தக சத்து அதிகமாக உள்ளது. அதிக அளவிலான கந்தக சத்து பல ஆரோக்கிய நன்மைகளை நமது உடலுக்கு வாரி வழங்குகிறது.

வெங்காயத்தாள் மருத்துவ பயன்கள்

  1. வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் கார்போஹைட்ரேட் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
  2. வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.
  3. வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது.
  4. வெங்காயத்தாள் இரத்தத்தில் சேர்ந்துள்ள கொழுப்பு அளவுகளை குறைக்க உதவுகிறது.
  5. வெங்காயத்தாள் இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் உடலின் குளுக்கோஸ் ஏற்புத் தன்மையை அதிகரிக்கிறது.
  6. வெங்காயத்தாள் கீல்வாதம் மற்றும் ஆஸ்துமாநோயால் பாதிக்கபட்டவர்களுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது.
  7. வெங்காயத்தாள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி,புற்றுநோயை குணப்படுத்தும்.வெங்காயத்தாளின் பாக்டீரியா எதிர்ப்பு  பண்புகளினால், செரிமான உபாதைகளுக்கு நிவாரணம் கூட வழங்குகிறது.
  8. வெங்காய தாளில் காணப்படும் விட்டமின் கே இரத்த உறைதலில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  9. வெங்காய தாளில் உள்ள பைட்டோ நியூட்ரியன்களான ப்ளவனாய்டுகள்,குவர்செடின் மற்றும் அன்டோசைனின் போன்றவை உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பாற்றலை வழங்குகின்றன.
  10. வெங்காய தாளில் உள்ள வைட்டமின் கே-வானது இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதைத் தடுத்து சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது.
  11. வெங்காய தாளானது புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கிறது. இதில் உள்ள அலிசின் என்னும் வேதிபொருளானது புற்றுநோயினை தடுக்கும் பண்பினைக் கொண்டுள்ளது.

Read Previous

முருங்கைக்காய் போட்ட ஆட்டு குடல் கறி குழம்பு..!! முழு செய்முறை விளக்கம் உள்ளே..!!

Read Next

புரிந்து கொள்ளும் ஒரு மனைவி இருந்தால் அவளும் அம்மாதான் கணவனுக்கு..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular