
வெஜிடபிள் கட்லெட் உதிராமல் முழுதாக எடுக்க இதை மட்டும் செய்ங்க போதும்..!! சமையல் டிப்ஸ்..!!
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வெஜிடபிள் கட்லெட் அதிகமான வெஜிடபிள் சேர்த்து செய்யலாம். இது குழந்தைகளுக்கு ஒரு சிறந்த ஸ்நாக்ஸாக இருக்கும். அதுவும் ஆரோக்கியம் நிறைந்த ஸ்னாக்ஸ் ஆக இருக்கும். இந்நிலையில் வெஜிடபிள் கட்லட் செய்யும்போது அதை உதிராமல் முழுதாக எடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
காய்கறி கலவையில் அதிக ஈரப்பதம் இருந்தால் கட்லெட் எண்ணெயில் போடும் போது உதிர்ந்து விடும். வேகவைத்த காய்கறிகளில் தேங்கி இருக்கும் தண்ணீரை முழுவதும் வடிகட்டிய பின்பு தான் தேவைக்கேற்ப பிரட்தூள் சேர்க்க வேண்டும். தண்ணீர் இருந்தால் பிரட் தூள் உதிர்ந்து போய்விடும். எனவே தண்ணீரை முழுவதுமாக வடிகட்டிய பின்பு தான் சேர்க்க வேண்டும். மக்காச்சோள மாவு சேர்த்து செய்தாலும் இதன் சுவை மாறாமல் அப்படியே இருக்கும். கண்டிப்பா ட்ரை பண்ணுங்க.