வெண்டைக்காய் சாப்பிடுவதன் மூலம் கண் பார்வை அதிகரிப்பது மட்டுமல்லாமல் அறிவு வளர்ச்சி உண்டாகும் என்றும் ரத்த சகை சரியாகும் என்றும் மருத்துவர்கள் கூறி வருகின்றனர், வெண்டைக்காயில் பல நன்மைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது..
வெண்டைக்காய் சாப்பிட்டால் அறிவு வளர்ச்சி உண்டாகும், ரத்த சோகை, மூச்சிறப்பை, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழிவு, வயிற்றுப்புண் மற்றும் கண் பார்வை குறைபாடு என அனைத்து நோய்களும் தீர்க்க சிறந்த மருந்தாக வெண்டைக்காய் உள்ளது, வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர் சதது திரவ இழப்பை தடுத்து உடலை முழுமையாக வைக்கிறது இதிலுள்ள கரையும் நார் சத்தானது கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்துவதன் மூலம் இதய நோய்கள் வருவதற்கான ஆபத்தை குறைக்கிறது, மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான போலிக் அமிலம் வெண்டைக்காயில் அதிகம் உள்ளது. கர்ப்பத்தில் உள்ள குழந்தையானது உள்ளே நல்லபடியாக வளரும் முதல் ட்ரைமெஸ்டரின் போதான குழந்தையின் நரம்பு குழாய்களின் வளர்ச்சிக்கு இந்த போலிக் அமிலம் ஆனது மிகவும் அவசியமாக இருக்கிறது, இதனை தொடர்ந்து வெண்டைக்காயின் வளவளப்பு தன்மையில் அதிக மருத்துவ பலன்களும் மறைந்துள்ளது இந்த வழவழப்பில் உள்ள நார்ச்சத்து அல்சர் பாதித்தவர்களுக்கு அருமருந்தாக பயன்படுகிறது இதனைத் தவிர மலச்சிக்கல் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்களுக்கும் உடல் உபாதைகளுக்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் பயன்படுகிறது, பிஞ்சு வெண்டைக்காய் தொடர்நது சாப்பிட்டு வர புற்றுநோய் வருவது தடுக்கப்படுகிறது, மேலும் கிராம் பாசிடிவ் பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தும் தன்மை வெண்டைக்காய்க்கு அதிகம் உண்டு, மேலும் சிறியவர் முதல் பெரியவர் வரை வெண்டைக்காய் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான அனைத்து ஆரோக்கியங்களும் கிடைக்கிறது..!!




