வெண்பொங்கல் ஒரு முறை இப்படி வச்சு பாருங்க..!! சுவையா இருக்கும்..!!

வெண் பொங்கல்….

தேவையானபொருள்கள் :

சிவப்பு அரிசி – ஒரு கப்
பாசிப்பருப்பு – கால் கப்
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1ஸ்பூன்
முந்திரி – சிறிதளவு
நறுக்கிய இஞ்சி – 1 ஸ்பூன்
ப.மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – 1 ஸ்பூன்
நெய் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

பாசிப்பருப்பை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும்.சிவப்பு அரிசியை 2 மணி நேரம் ஊறவிடவும்.பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் ஊறவைத்த சிவப்பு அரிசி, பாசிப்பருப்பு, 3 டம்ளர் தண்ணீர், உப்பு சேர்த்து 4 விசில் வைத்து வேக வைத்து இறக்கவும்.கடாயில் எண்ணெய், நெய் விட்டு சூடானதும், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இஞ்சி, ப.மிளகாய், முந்திரி சேர்த்து தாளித்த பின்னர் வேக வைத்த அரிசி – பருப்பு கலவையில் சேர்த்துக் கிளறி இறக்கி பரிமாறவும்.

Read Previous

அருமையான சிறுகதை..!! கண்களில் கண்ணீர் வரவைத்த பதிவு..!!

Read Next

நகை உருவாக்கும் பகை..!! கணவன் மனைவி கட்டாயம் படிங்க..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular