தினமும் வெறும் வயிற்றில் விருதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து குடித்து வந்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்..
வெதுவெதுப்பான வெந்நீரில் நெய் கலந்து குடிப்பது குடல் இயக்கத்தை சீராக்குவது மட்டுமின்றி செரிமான என்சைம் உற்பத்தியை அதிகரித்து மலச்சிக்கல் அபாயத்தை போக்க செய்கிறது. நெய் நுகர்வு உடலுக்கு வலிமையும் ஆற்றலையும் தரப்படும் அதனை நீரில் கலந்து காலையில் குடித்து வந்தால் உடலில் சோர்வின்றி சுறுசுறுப்பாக காணப்படுவோம் அனைத்து பணிகளையும் திறம்பட செய்ய முடியும். நெய்யில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் வைட்டமின் ஈ உள்ளடக்கம் சரும நெகிழ் தன்மையை மேம்படுத்த உதவுகிறது நீரேற்றம் அளவை பராமரிக்க உதவுகிறது அதனை வெதுவெதுப்பான நீரில் கலந்து அருந்துவது முகப்பருவை போக்கி சரும ஆரோக்யத்தை காக்க உதவுகிறது. ஆயுர்வேதத்தில் நெய் மூளையின் உணவாக கருதப்படுகிறது அதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் மூளை செயல் திறன் மற்றும் ஞாபக சக்தியை மேம்படுத்த கூடும் அதனை வெதுவெதுதுப்பான நீரில் கலந்து குடிப்பது மனதில் தெளிவை அதிகரிக்க உதவுகிறது..
வெயில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வை அளித்து அதிகமாக சாப்பிடுவதை தடுக்கக் கூடும் மேலும் மெட்டபாலிசத்தை ஊக்குவித்து கலோரி எரிப்பை துரிதப்படுத்த கூடும். நெய்யில் உள்ள ஒமேகா 3 கொழுப்புகள் மற்றும் பிற சத்துக்கள் மூட்டு இறுக்கத்தை போக்குவது மட்டுமின்றி ஆர்த்ரிடிஸ் அறிகுறிகள் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது. பெண்கள் தினமும் நெய் தண்ணீர் அருந்தி வந்தால் ஹார்மோன் ஏற்ற இறக்கங்களை சரி செய்து விட முடியும் இவை மூட்டு ஸ்விங்ஸ் பிரச்சனைக்கு நிச்சயம் உதவியாக இருக்கும் இது தவிர மாதவிடாய் காலத்தில் வலி நிவாரணியாகவும் இருக்கும்..!!