
அதிகரித்து வரும் வெப்ப அலைகள். எதிர்கொள்ள தயாராக இருங்கள்.. பொது மக்களுக்கு ஐநா எச்சரிக்கை.
உலகில் வெப்ப அலை நிகழ்வுகள் தொடர்ந்து தீவிரம் அடையும் என்பதால் அதனை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. இயற்கை ஆபத்துகளில் ஒன்றாக வெப்ப அலைகள் கருதப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்கள் வெப்பத்தால் ஏற்படும் உடல் சோர்வால் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் வெப்ப அலை நிகழ்வுகள் தொடர்ந்து தீவிரமடைகிறது. அதனை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் ஐநா தெரிவித்துள்ளது.
வெப்ப அலைகளை தடுப்பதற்கு கார்பன் எரிபொருள்கள் பயன் படுத்துவதை நிறுத்த வேண்டும். அனைத்தையும் மின் மயமாக்கல் வேண்டும். வளர்ந்து கொண்டு வரும் நகர மயமாக்கல் காரணமாக வெப்ப அலை அதிகரித்து வருகிறது. மனித ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதாரங்களில் மிகவும் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்த கூடும் எனவும் எச்சரித்து உள்ளது.ஒ