வெயிலுக்கு இதமான ரோஸ் மில்க்..!! ரோஸ் மில்க் வீட்டிலேயே செய்வது எப்படி..!!

ரோஸ் மில்க் என்பது யாருக்கு தான் பிடிக்காது. சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் ஒன்று தான் இந்த ரோஸ் மில்க். இந்தக் கோடை காலத்தில் அனைவரும் வெயிலுக்கு இதமான குளிர் பானங்களை தான் குடிக்க விரும்புவோம். இந்நிலையில் ரோஸ் மில்க் கடையில் வாங்காமல் வீட்டிலேயே சுலபமாக எவ்வாறு செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பால் ஒரு லிட்டர்

சர்க்கரை 200 கிராம்

ரோஸ் எசன்ஸ்  10 டிராப்

பன்னீர் 4 டிராப்

சப்ஜா விதை 10 கிராம்

பாதாம் 10

செய்முறை:
பாலில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து காய்ச்சி ஆற வைக்க வேண்டும்.பாதாமை வெந்நீரில் போட்டு தோலெடுத்து நீளவாக்கில் பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.சப்ஜா விதையை இரவே ஊற வைக்க வேண்டும். அது காலையில் முத்து முத்தாக ஜவ்வரிசி ஊறியது போல் இருக்கும்.ஆறிய பாலில் ரோஸ் எசன்ஸ், சப்ஜா விதை, நறுக்கி வைத்துள்ள பாதாம், சர்க்கரை, பன்னீர் அனைத்தையும் சேர்க்க வேண்டும்.இப்போது கலந்த கலவையை ஃப்ரிட்ஜில் வைத்து குளிர வைத்து குடிக்கவேண்டும்.

Read Previous

காலை மடக்கி உட்கார வேண்டும் என முன்னோர்கள் கூறுவதின் உண்மையான காரணம் இதுதான்..!!

Read Next

கண்கள் சிவந்து போனால் உடனே என்ன செய்ய வேண்டும் தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular