
வெயில் காலத்தில் வரக்கூடிய உடல் சூட்டை குறைக்கவும் வெயில் காலத்தில் வரக்கூடிய தோல் சம்பந்தமான அனைத்து சொறி சிரங்கு கொப்பளங்களை சரி செய்யும் நன்னாரி வேர்..
பச்சையான நன்னாரி வேரை இடித்து சாறு பிழிந்து சூடான தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் காய்ந்த வேரை வாங்கி வந்து தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து கசாயம் வைத்து குடிக்கலாம்.. தேவைப்பட்டால் சீரகம் மிளகு சேர்த்துக் கொள்ளலாம்..
உடல் சூட்டினால் வரக்கூடிய நோய்கள் சிறுநீரக கற்கள் பித்தப்பை கற்கள் சூட்டினால் வரக்கூடிய அனைத்து தோல் பிரச்சினைகள் இவைகளுக்கு நல்ல பலன் அளிக்கும்..
எவையெல்லாம் வாசனையுடன் இருக்கிறதோ அவையெல்லாம் ரத்தத்தை சுத்தப்படுத்தும்.. எவையெல்லாம் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறதோ அவை எல்லாம் ஆண்மை பெண்மையை அதிகரிக்கும்.. நறுமணம் மிக்கதெல்லாம் மலட்டுத்தன்மையை சரி செய்யும்.. ரத்தம் அசுத்தமாக இருந்தால் தான் விந்தணுக்களும் கருமுட்டையும் பலவீனமாக இருக்கும்.. ரத்தம் சுத்தமாகும் போது விந்தணுக்களும் கருமுட்டையும் ஆரோக்கியமாக வெளிப்படும்…நறுமணம் மிக்க மூலிகைகள் எல்லாமே மனிதனுக்காக படைக்க பட்ட அற்புதமான மருந்துகள்… நன்னாரி இலைகளில் எந்த வாசனையும் இருக்காது.. ஆனால் பாருங்கள் இதனுடைய வேர் வாசனை முகர்ந்தால் முகர்ந்து கொண்டே தலை தூக்க வைக்கும்..
இயற்கையான முறையில் நன்னாரி சர்பத் செய்து விற்பவர்கள் இருந்தால் நிச்சயம் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.. கடைகளில் விற்கும் நன்னாரி சர்பத்தில் ரசாயனம் கலந்திருப்பார்கள்..
ஐம்புலன்கள் தானே உடலையும் மனதையும் இயக்குகிறது.. வாசனை மிக்க மூலிகைகள் எல்லாமே உடலையும் மனதையும் குணப்படுத்தும்..
நன்னாரி வேர் இந்த வெயில் காலங்களில் பயன்படுத்தி பாருங்கள்..