வெரிகோஸ் வெயின் நோயால் கஷ்டப்படுகிறீர்களா..? இந்த இரண்டு பொருளை வைத்து வெரிகோஸ் வெயின் நோயை விரட்டலாம் வாருங்கள்..!!

ஏழு நாட்கள் மட்டும் இதை பயன்படுத்தி பாருங்கள் உங்களுக்கு இருக்கக்கூடிய வெரிகோஸ் வெயின் என்கின்ற நரம்பு சுருட்டல் முற்றிலும்மாய் குணமடையும்.

அதிக நேரம் நின்று கொண்டே வேலை பார்ப்பவர்களுக்கும், உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பவர்களுக்கும் அதிகமான அழுத்தம் கால்களில் ஏற்படுவதால் இந்த நரம்பு சுருட்டல் ஏற்படும். இதனை சரி செய்யக்கூடிய அற்புதமான கேரளா வைத்தியத்தை இப்பதிவில் காணலாம்.

தேவையான பொருள்கள்

  1. கருப்பு எள் 3 ஸ்பூன்
  2. காய்ச்சாத பால் அரை டம்ளர்

செய்முறை

முதலில் கருப்பு எள்ளை எடுத்துக் கொள்ளவும். அதை ஒரு பவுலில் போட்டு காய்ச்சாத பாலை ஊற்றி  ஊற வைக்கவும்.

இதனை இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் ஊற வேண்டும். ஊறிய பின் அதனை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் சேர்க்க வேண்டாம் பாலே போதும்.

அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை

இந்த பேஸ்ட்டை எங்கு நரம்பு சுருட்டல் உள்ளதோ அங்கு நன்றாக மேல்நோக்கி தேய்த்து விடவும். மேல் நோக்கி தேய்க்கும் பொழுது இரத்த ஓட்டம் மேல் நோக்கி பயும். அதனால் உங்களுக்கு வெரிகோஸ் வெயின் சீக்கிரமாய் குணமடையும்.

நன்கு பற்று போல் போடவும். ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரம் வைத்திருக்கலாம். அல்லது இரவு முழுவதும் கூட வைத்திருக்கலாம்.

இது நன்கு காய்ந்தவுடன் சாதாரணமாக தண்ணீர் கொண்டு கழுவி விடவும். இது நன்கு காய காய உடலில் சீரான ரத்த ஓட்டம் பாயும்.

மேலும் ஒரு நாளைக்கு நீங்கள் எட்டு மணி நேரம் நின்று கொண்டு வேலை பார்ப்பவர்கள் என்றால் கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் பொழுது சம்மனங்கால் போட்டு உட்காரவும்.

மேலும் நீங்கள் படுத்து உறங்கும் பொழுது மூட்டுகளின் அடியில் இரண்டு தலையணைகளை வைத்து காலை மேல் நோக்கி இருக்குமாறு வைத்து தூங்கலாம். இப்படி ஒரு வாரம் செய்து பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு உள்ள வெரிகோஸ் நோய் என்கின்ற நரம்பு சுருட்டல் சீக்கிரமாய் குணமடையும்.

Read Previous

உங்கள் உடலில் இருந்து அதிக துர்நாற்றம் வீசுகிறதா..? அப்பொழுது இதை பயன்படுத்தி பாருங்கள்..!!

Read Next

மாங்காயை சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சியா.? குளிர வைக்கும் உணவுகள் இதோ.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular